News

Thursday, 19 November 2020 03:34 PM , by: Daisy Rose Mary

Credit :Maalaimalar

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 18.61 சதவீதம் நெல் கொள்முதல் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காரீப் 2020-21 பருவத்தில், தமிழகம், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், தெலங்கானா, உத்தராகண்ட், சண்டிகர், ஜம்மு காஷ்மீர், கேரளா, குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 17-ஆம் தேதி வரை, 286.79 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

18.61 சதவீதம் அதிகம்

இது கடந்த ஆண்டு, இதே காலத்தின் கொள்முதலைவிட 18.61 சதவீதம் அதிகமாகும். இந்த கொள்முதல் மூலம் 24.78 லட்சம் விவசாயிகள், ரூ.54147.38 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெற்றுள்ளனர்.

மேலும் தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் 45.10 லட்சம் டன் பருப்பு கொள்முதல் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா மற்றும் ராஜஸ்தானிலிருந்து கடந்த 17-ஆம் தேதி வரை 60100.06 மெட்ரிக் டன் பாசி பயறு, உளுந்து, நிலக் கடலை மற்றும் சோயா பீன்ஸ் ஆகியவற்றை அரசு கொள்முதல் செய்துள்ளது. இதன் மூலம் 34918 விவசாயிகள், ரூ. 324.43 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெற்றுள்ளனர்.

இதே போல் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருந்து 17-ஆம் தேதி வரை 5089 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய், 3961 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ரூபாய் 52.40 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைத்துள்ளது.

மேலும் படிக்க..

கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: கன்னியாகுமரி மாணவி முதலிடம்!!

குளிர்கால மாட்டுக்கொட்டகை பராமரிப்பு- Sanitizers போடுவது அவசியம்!

நாட்டுக்கோழி வளர்ப்புக்கு 50% மானியம்: நவ., 23க்குள் விண்ணப்பித்திடுங்கள்!!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)