1. செய்திகள்

நாட்டுக்கோழி வளர்ப்புக்கு 50% மானியம்: நவ., 23க்குள் விண்ணப்பித்திடுங்கள்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

Credit : Siru thozhil ideas

திருவாரூர் மாவட்டத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் வரும் 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் 50 சதவீத மானியத்துடன் 25 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒவ்வொரு பயனாளிக்கும் ஒருநாள் வயதுடைய 1,000 கோழிக் குஞ்சுகள் வழங்கப்படும். மேலும் 1,500 கிலோ தீவனம் மற்றும் இன்குபேட்டர் கொள்முதல் செய்ய 50 சதவீத மானியம் வழங்கப்படும்.

தகுதிகள்

பொருளாதார ரீதியாக ஏழ்மையில் உள்ளவர்கள் மட்டுமே பயனாளிகளாக தேர்வு செய்யப்படுவார்கள். கணவனை இழந்த பெண்கள், ஆதரவற்றோர், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பயனாளிகள் தங்களுக்கு சொந்தமான இடத்தில் 2,500 சதுர அடியில் 1,000 கோழிக்குஞ்சுகளை பராமரிக்கும் வகையில் கொட்டகை அமைக்க வேண்டும். கால்நடை பராமரிப்புத் துறையின் வேறு எந்த கோழி வழங்கும் திட்டத்திலும் பயன் பெற்றிருக்கக் கூடாது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் நவ.23-ம் தேதிக்குள் அருகில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க.....

கிராமங்களில் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் தொடங்க 35% மானியம் மற்றும் ரூ. 25 லட்சம் வரை கடனுதவி!!

நாட்டுகோழி வளர்ப்பு திட்டம் : 50% மானியத்தில் 1000 கோழி குஞ்சுகள், முட்டை அடைகாத்தல் கருவி - விண்ணப்பங்கள் வரவேற்பு!!

கோழி பண்ணை அமைக்கும் தோனி - 2000 கருங்கோழிகள் ஆர்டர் !!

English Summary: Get Native Chicken and other benefits for 50 percent subsidy by applying before november 23rd under National Agricultural Development Scheme

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.