தமிழகத்தில் முதல் முறையாக மாணவர்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் புதிய முயற்சி செய்து இருக்கிறார்.
+2 முடித்தபின்பு உயர்கல்வி சேராத மாணவர்களுக்கான, உயர்வுக்குப்படி எனும் நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் நேற்றைய தினம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஒருஅடி மேலே சென்று வருகை தந்த உயர்கல்வி தொடர இயலாத மாணவர்களுக்கு, அக்கூட்டத்தின் இறுதியில் குறியதீர் கூட்டம் ஒன்ற நடத்தியுள்ளார்.
இந்த குறைதீர் கூட்டத்தில் கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து வழங்கி 55 நபர்களுக்கு அட்மிஷன் வழிகாட்டுதலுக்கு உதவினார்.
மேலும் அந்த குறைதீர் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர், பொருளாதார ரீதியாக உதவி கேட்போருக்கு வங்கியில் கல்விக் கடன் பரிந்துரைப்பதாகவும், பொறியியல் படிக்கும் மாணவர்க்கு 4 லட்சம் ரூபாய் வரை கடனுதவி பெற வழிவகை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் அனைத்து மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழி செய்யும் வரையில் இத்தகைய மாணவர்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு நடவடிக்கை தேவை! மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!!
தக்காளி, வெங்காயம் விலை ஏற்ற விவகாரம்! வரப்போகிறதா நடமாடும் காய்கறி கடை!!