கணவனின் சுகவாழ்வு, நீடிய ஆயுள், தொழில் லாபம், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை போன்றவற்றிற்காக மனைவியும், கண் நிறைந்த கண்ணியமான கண்ணாளன் வேண்டும் என்பதற்காக, கன்னிப் பெண்களும் மகாலட்சுமியை வணங்கும் பண்டிகையே வரலட்சுமி விரதம்.
காக்கும் கடவுள் மகாவிஷ்ணுவின் துணைவியும், செல்வங்களை அளித்தருளக்கூடிய மகாலட்சுமி தேவியை போற்றி வணங்கி அவரின் அருளாசி பெறுவதே இந்த விரதத்தின் நோக்கம்.
அந்த வகையில் தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திராவில் மிகவும் பக்தி சிரத்தையாகப் பெண்கள் கடைப்பிடிக்கும் முக்கிய விரதம் வரலட்சுமி விரதம்.
ஆடி மாதத்தில் பெளர்ணமிக்கு முன் வரக்கூடிய வெள்ளிக்கிழமை தினத்தில் இந்த வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி இந்தாண்டு இன்று வரலட்சுமி பூஜை கடைப்பிடிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை தினத்தில் காலையில் குளித்து மகாலட்சுமியை வணங்கி விரதத்தை தொடங்க வேண்டும். கும்பத்தில் அம்மன் ரூபத்தை வடித்து, மலர்களால் அலங்கரித்து, தங்க நகைகளை அணிவித்து, வரலட்சுமியை வணங்குவர்.
வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜை செய்ய உகந்த நேரம்:
விருச்சிக லக்னகாரர்கள் பூஜைக்கான உகந்த நேரம்
(பிற்பகல்) - 01:53 முதல் 04:11 வரை
கும்ப லக்னம்
(மாலை) - 07:57 முதல் 09:25 வரை
மற்ற லக்னகாரர்கள்
மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை பூஜை செய்யலாம்.
இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால், அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும். வீட்டில் வைத்து வழிபட இயலாதவர்கள், கோவில்களில் சென்று வணங்கி வரலாம்.இதனையொட்டி, தமிழகத்தின் பெரும்பாலான கோவில்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானங்கள் உள்ளிட்டவை நடத்தப்படுவத வழக்கம். நாமும் வரலட்சுமியை வணங்கி வரம் பெருவோம்.
மேலும் படிக்க...
ரக்க்ஷா பந்தன் கொண்டாட்டம் - உங்கள் கைவண்ணத்தில் ராக்கி தயாரிக்க சிம்பிள் டிப்ஸ்!
LIC வழங்கும் குறைந்த EMI-யில் வீட்டுக்கடன் திட்டம்! 6.90% வட்டி மட்டுமே!!