1. தோட்டக்கலை

மலர் சாகுபடியில் நல்ல வருமானம் தரும் ஜாதிமல்லி!!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
credit by 1234RF.com

அதிக வாசனை கொண்ட பூ வகைகளில் ஜாதி மல்லியும் ஒன்று, சந்தைகளில் அதிகம் விற்பனை செய்யப்படும் மலர்களில் ஜாதி மல்லிக்கு எப்பொழுதும் தனி மவுசு உண்டு, நீங்கள் மலர் விவசாயம் செய்ய விருபினால், ஜாதி மல்லி போன்ற அதிகம் விற்பனை செய்யப்படும் பூக்களைச் சாகுபடி செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும், வாருங்கள் ஜாதி மல்லி சாகுபடி குறித்து விரிவாக பார்ப்போம்

இரகங்கள் (Varieties)

ஜாதிமல்லியில், பெங்களூர், லக்னோ, திம்மாபுரம், கோயம்புத்தூர் ஒயிட், டிரிப்ளாய்டு மற்றும் தென்காசி உள்ளிட்ட இரகங்கள் உள்ளன.

பருவம் (Season)

ஜாதிமல்லியைப் பயிர் செய்ய ஜூன் முதல் நவம்பர் வரையிலான மாதங்கள் சிறந்தவை.

மண் (Soil)

ஜாதிமல்லியை விதைக்க, நல்ல வடிகால் வசதியுள்ள மண் கலந்த செம்மண் மற்றும் வண்டல் மண் ஏற்றது. களர், உவர் நிலங்கள் சாகுபடிக்கு உகந்தவை அல்ல. போதிய அளவு வசதியும், சூரிய வெளிச்சமும், இதன் வளர்ச்சிக்கு முக்கியத் தேவையாகும்.

நிலம் (Land)

தேர்வு செய்த நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது 30 சென்டிமீட்டர் நீளம், அகலம் மற்றும் ஆழம் உள்ள குழிகள் எடுத்து ஒரு மாதம் ஆற விடவேண்டும். ஒவ்வொரு குழிக்கும் நன்கு மக்கிய தொழு உரம் இடவேண்டும். வரிசைக்கு வரிசை 2 மீட்டர் இடைவெளி, குழிக்கு குழி 1.5 மீட்டர் இடைவெளி விட வேண்டும்.

Image credit: youtube

விதைத்தல் (Sowing)

வேர்ச்செடிகள் அல்லது பதியன் குச்சிகளை நடவு செய்ய வேண்டும்.பென்சில் பருமனுள்ள நன்றாக முற்றியத் தண்டுகளை, ஒரு கத்தி கொண்டு தண்டின் ஒரு பகுதியில் இலேசாக மேல் பட்டையைச் சீவி நீக்கிய பின்னர், அத்தண்டினை வளைத்து வெட்டிய பாகத்தினை மண்ணில் புதைக்கவேண்டும்.

பிறகு நீர் பாய்ச்சவேண்டும். சீவப்பட்ட பகுதியிலிருந்து சல்லி வேர்கள் தோன்றும். மூன்று மாதங்கள் கழித்து பதியன்களை வேர்கள் சேதமடையாமல், மண்ணிலிருந்து எடுத்து, நடவு செய்யப் பயன்படுத்தலாம். வளர்ச்சியூக்கிகளான இண்டோல் அசிடிக் அமிலம் மற்றும் இண்டோல் ப்யூரிட்டிக் அமிலம் 500 முதல் 1000 பிபிஎம் என்ற அளவில் பயன்படுத்தி வேர் பிடித்தலைத் துரிதப்படுத்தலாம். இம்முறையில் 45 நாட்களில் வேர்கள் தோன்றும்.
பதியன் குச்சிகள் அல்லது வேர்ச்செடிகளை குழியின் மத்தியில் நடவு செய்ய வேண்டும். குறிப்பாக மழைக்காலத்தில் நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம் (Water Management)

செடியை நட்டிய உடனேயே நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு மூன்றாம் நாள் தண்ணீர் பாய்ச்சுதல் அவசியம். அதன் பின்னர் 10 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.

உரங்கள் (Fertilizers)

செடி ஒன்றிற்கு 10 கிலோ தொழு உரத்துடன் 60 கிராம் தழைச்சத்து, 120 கிராம் மணிச்சத்து மற்றும் 120 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை ஆண்டிற்கு இருமுறை இரண்டாகப் பிரித்து இடவேண்டும். உரமிடும்போது செடியிலிருந்து 30 சென்டிமீட்டர் தள்ளி, நன்கு கொத்தி மண்ணுடன் கலக்கச் செய்யவேண்டும். பின்பு தேவையான அளவு நீர் பாய்ச்சவேண்டும்.

களை எடுத்தல்

செடிகள் வளரும் வரை, களை ஏதும் இல்லாமல் பராமரிக்க வேண்டும். செடிகளை வருடம் ஒரு முறை அதாவது டிசம்பர் கடைசி வாரத்தில் கவாத்து செய்ய வேண்டும். தரை மட்டத்திலிருந்து 45 சென்டிமீட்டர் உயரம் வரை வெட்டி விடவேண்டும். செடிகளை படரவிடாமல் குத்துச்செடிகளாக வளர்க்கவேண்டும். செடிகள் நடவு செய்து ஓராண்டு கழித்து முதல் முறையாக கவாத்து செய்யவேண்டும்.

பயிர் பாதுகாப்பு (Protection)

மொட்டுப்புழுத் தாக்கினால் மானோகுரோட்டோபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். இதன்மூலம் மொட்டுப்புழுத் தாக்குதல் கட்டுப்படும்.
இலை வண்டுகள் தாக்கம் இருப்பின் விளக்குப் பொறி வைத்து, கவர்ந்து அழிக்க வேண்டும்.
இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த 2 மில்லி மான்கோசெப் மருந்தை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.
சிவப்பு சிலந்திப் பூச்சிகளை கட்டுப்படுத்த நனையும் கந்தகம் 50 சதத்தூளை ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.

அறுவடை (Harvesting)

செடிகளை நட்டிய ஒரு வருடத்திலேயே பூக்கள் பூக்க ஆரம்பித்து விடும். ஆனாலும் இரண்டாம் வருடத்திலிருந்து தான் சீராக மகசூல் கிடைக்கும். மொக்குகள் விரிவதற்கு முன்னதாகவே காலை நேரங்களில் பறிக்கவேண்டும். வாசனை எண்ணெய் தயாரிப்பதற்கு மொக்குகள் மலர்ந்த பின்னர் காலை வேளைகளில் பறிக்கவேண்டும்.

மகசூல்

ஒரு ஹெக்டருக்கு 11 டன் பூ, மொக்குகள் வரை மகசூல் பெறலாம்.

ஜாதிமல்லியின் நன்மைகள்:

English Summary: Here Few tips to cultivate Jathi malli Published on: 09 July 2020, 06:19 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.