Idli exhibition in Coimbatore! 500 varieties of Idlis!!
கோவையில் இட்லி கண்காட்சி நிகழ்ந்துள்ளது. கோவையில் 500 வகை இட்லிகள் அடங்கிய இட்லி கண்காட்சி காண்போரை அதிகமாக ஈர்த்துள்ளது.
கோவையில் 500 வகை இட்லிகள் பங்குபெற்ற இட்லி கண்காட்சி காண்போரை அதிகமாகக் கவர்ந்துள்ளது. கோவை சுங்கம் பகுதியில் செயல்பட்டு வருகின்ற தனியார் கல்லூரியில் இட்லி கண்காட்சி நடைபெற்று இருக்கிறது. கோவை மல்லிப்பூ இட்லி நிறுவனத்தினைச் சேர்ந்தவர்கள் சிறு தானியங்கள், காய்கறிகளை கொண்டு 500 வகைகளில் இட்லிகளைத் தயாரித்துக் காட்சிப்படுத்தி இருக்கின்றனர்.
இந்த இட்லி கண்காட்சியில் மீன் வடிவிலும், கரடி, பொம்மைகள், பட்டாம்பூச்சி, இசைக்கருவிகள், ஹார்டின் வடிவங்களிலும் இட்லிகள் தயரிக்கப்பட்டுக் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இது பார்வையாளர்களை அதிகமாக கவர்ந்தது. இதுகுறித்துக் கோவை மல்லிப்பூ இட்லி நிறுவனத்தை சேர்ந்த இனியவன் கூறுகையில், கடந்த 25 ஆண்டுகளாக இட்லி தயாரித்து விற்பனை செய்து வருவதாகக் கூறுகிறார்.
இட்லி ஒரே வடிவத்தில் இருப்பதால் அதனை மாற்றிக் குழந்தைகளுக்கு பிடித்தது போல இக்கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மேலும், சத்தான தானியங்களைச் சேர்த்தும் இட்லி தயாரித்து வருகிறோம். இதனை தொடர்ந்து இட்லி தயாரிப்பில் உலக சாதனையை படைத்துள்ளோம். இட்லியை உலகம் முழுக்கக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான் அவர்கள் இலக்கு எனத் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் படிக்க
30 நிமிடங்களில் உடல் எடை குறைய வேண்டுமா? இதைச் செய்யுங்கள்!
இந்த கோடையில் மாம்பழங்களை எப்படி வாங்குவது? கவனத்தில் கொள்ள வேண்டியவை!