News

Monday, 15 August 2022 03:09 PM , by: Poonguzhali R

Increase in DA for Government Employees: Govt. notification!

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறித்துள்ளார். சுதந்திரத் தின விழாவில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அறிவித்த நிலையில் இந்த தகவலையும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிறது.

இந்தியாவின் சுதந்திர தின நாள் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின விழாவில் உரையாற்றினார். அப்போது அவர் பல்வேறு சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவற்றில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34% ஆக உயர்த்தப்படும் எனவும் அறிவித்திருக்கிறார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, “ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையினை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தப்படும் எனவும், இந்நடைமுறை 2022 ஜூலை 1ஆம் தேதி முதல் கணக்கிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். அரசுக்கு ஆண்டுக்கு 1947 கோடியே 60 லட்சம் ரூபாய் அதிகமாகச் செலவாகும்” என கூறியுள்ளார். தற்பொழுது தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகின்றது. இனி வரும் காலங்களில் 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

இதன் மூலம் 16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். அரசுக்கு ஆண்டுக்கு 1947 கோடியே 60 லட்சம் ரூபாய் அதிகமாகச் செலவாகும்” என கூறியுள்ளார். தற்பொழுது தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகின்றது. இனி வரும் காலங்களில் 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க

ரூ. 70 ஆயிரம் கோடியைத் தாண்டிய திருப்பூர் பின்னலாடை வர்த்தகம்!

கரும்புக்கு ஆதாரவிலை ரூ. 252 கோடி அறிவிப்பு: தமிழக அரசு

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)