1. செய்திகள்

மாமல்லபுரத்தில் கலைக்கட்டும் பட்டம் விடும் திருவிழா!

Poonguzhali R
Poonguzhali R
Kite Festiva

மாமல்லபுரப் பகுதிக்கு அருகில் உள்ள கிழக்குக் கடற்கரை சாலையில் சர்வதேசப் பட்டம் விடும் திருவிழா நேற்று தொடங்கியது. இது சுற்றுலாத் துறைக்கு சொந்தமான சுமார் 15 ஏக்கர் கடலோரப் பகுதியில் நடைபெற்று வருகிறது. இது குறித்த விரிவான தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.

சர்வதேசப் பட்டம் விடும் திருவிழா ஆகஸ்ட் 13,14,15 ஆகிய மூன்று தினங்கள் நடைபெறுகின்றன. இத்திருவிழாவின் முதல் நாளான நேற்று சுமார் 8 ஆயிரம் பேர் கலந்துகொண்டுள்ளனர். இவ்விழாவைத் தமிழக அமைச்சர்களான மதி வேந்தன், தா.மோ. அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் இவ்விழாவில் கலந்துகொண்டு வருகின்றனர். குறிப்பாக, அமெரிக்க, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து 80க்கும் மேற்பட்ட ராட்சதப் பட்டம் செய்யும் கலைஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் கலைஞரின் வடிவமைப்பில் பறந்த கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை பட்டம் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் ஈர்த்துள்ளது. அதேபோல ஏலியன், கார்ட்டூன் முதலான பல வகையான பட்டங்கள் குழந்தைகளைக் கவரும் வகையில் நேற்று வானில் விடப்பட்டன.

இரவில் கலை நிகழ்ச்சிகள், இசைவிழா, பேஷன் ஷோ, உணவு திருவிழா உள்ளிட்ட பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று மாலை ராஜேஸ் வைத்யாவின் இசைக்கச்சேரி நடைபெற உள்ளது என்பது நினைவுக்கூறத்தக்கது.

மேலும் படிக்க

ரூ. 70 ஆயிரம் கோடியைத் தாண்டிய திருப்பூர் பின்னலாடை வர்த்தகம்!

இந்த 5 ரூபாய் இருக்கா? இந்தாங்க பிடிங்க ரூ. 2 லட்சம்!

English Summary: Mamallapuram Kite Festival: Joyfull Enjoyment!! Published on: 14 August 2022, 02:55 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.