சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 25 February, 2025 11:58 AM IST
அனைத்திந்திய கலாம் கனவு அறக்கட்டளை

மறைந்த நமது முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பாரத ரத்னா ஏபிஜெ அப்துல் கலாம் அவர்களின் கனவு திட்டமாக விளங்கியது, இந்தியா முழுவதும் 10 கோடி மர கன்றுகள் நடுதல் பணியாகும். அவரின் கனவை நிறைவேற்ற அனைத்திந்திய கலாம் கனவு அறக்கட்டளை சார்பாக 2025 மரக்கன்றுகள் நடுதல் மற்றும் தேசிய அளவிலான மரக்கன்றுகள் நடுவது குறித்து விழிப்புணர்வு துவக்க விழா தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் மொரப்பூரில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு அறக்கட்டளையின் நிறுவனர் சென்னையன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அரூர்  சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார்  மற்றும் முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர் பசுபதி மற்றும் அனைத்திந்திய வேளாண் மாணவர் சங்கத்தின் தேசிய செயலாளர் முனைவர்.வினோத் மற்றும் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் சிவம் மற்றும் செந்தில் DM ,Tasmac மற்றும் அறக்கட்டளையின் அறங்காவலர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் உட்பட மூக ஆர்வலர்களான சதீஷ், ஹரிஹரன், செந்தில்,சாமிக்கண்ணு, அய்யன் துறை மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் நோக்கம் என்ன?

இந்த நிகழ்ச்சியின்  முக்கிய நோக்கம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை  உள்ள சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும்  பொதுமக்கள் என  2025 பேர் மூலம்  2025 மர கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.

மரக்கன்றுகள் நடுவதன் முக்கியத்துவத்தை இளைஞர்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும் மற்றும்  காலநிலை மற்றும் பருவநிலை மாற்றத்தினால் உண்டாகும் விளைவுகள் குறித்து மாணவர்கள், பொதுமக்கள், சமூக அலுவலர்கள் போன்றவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிற வகையில் இந்த நிகழ்ச்சியை தொடங்கப்பட்டுள்ளது.

நீங்களும் பங்கேற்கலாம்?

அனைத்திந்திய கலாம் கனவு அறக்கட்டளை எடுத்துள்ள முன்னெடுப்பில் நீங்களும் ஒருநபராக இணையலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், மரக்கன்றுகளை நட்டு, நம் சுற்றுப்புற பகுதிகளில் மரக்கன்றுகளை நடுவதன் முக்கியத்துவத்தை பற்றி ஒரு நிமிட காணொளி வாயிலாக எடுத்துரைத்தல் வேண்டும்.

இந்நிகழ்ச்சியின் முன்னெடுப்பு குறித்து கார்த்திகேயன் கூறுகையில்,  ”நாங்கள் பொதுமக்களிடையே அனைத்திந்திய கலாம் கனவு அறக்கட்டளை சார்பாக வைக்கும் ஒரு தாழ்மையான  வேண்டுகோள் என்னவென்றால் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், வழக்கறிஞர்கள், கல்லூரி மாணவர்கள் நடிகர்கள் மற்றும் முக்கிய  பிரதிநிதிகள் மரக்கன்றுகள் நடுதல் முக்கியத்துவத்தை மிகப்பெரிய விழிப்புணர்வு நிகழ்வாக கொண்டுச் செல்ல உங்கள் ஆதரவினை நல்குகிறோம்."

"மாறிவரும் காலநிலைகளை சமாளிக்க நம் சுற்றுப்புறத்தை பசுமை மயமாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதனை அனைவரும் உணர்ந்து செயல்படுவோம். மரம் நடுவோம்..மழை பெறுவோம், பூமித்தாயை பசுமை போர்வையால் குளிரூட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Read more:

ரூ.35.30 கோடி ஈவுத்தொகை: வளர்ச்சிப் பாதையில் தேசிய விதைகள் கழகம்

Kisan e-Mitra: விவசாயிகளுக்கு எப்படி உதவுகிறது கிசான் இ-மித்ரா ஏஐ?

English Summary: Initiative to plant 2025 saplings from Kashmir to Kanyakumari by 2025 people
Published on: 25 February 2025, 11:58 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now