News

Thursday, 27 August 2020 04:32 PM , by: Daisy Rose Mary

சோளம், கம்பு, நிலக்கடலை உள்ளிட்ட வேளாண் பயிர்களை 31-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டிய மாவட்டங்கள், தங்களின் பயிர்களை காப்பீடு செய்துக்கொள்ள வேளாண் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

பயிர் காப்பீடு (Crop Insurance)

இயற்கை பேரழிவுகளிலிருந்து தங்களின் பயிர்களை பாதுகாக்க விவசாயிகள், பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. தற்போது, காரீஃப் பருவப் பயிர்களுக்கான காப்பீடு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள பயிர்களுக்கு கடைசி தேதி அறிவிக்கப்பட்டு காப்பீடு முடிக்கப்பட்டுள்ளது.

அதன் படி வரும் 31-தேதிக்குள் பயிர் காப்பீடு செய்யப்பட வேண்டிய வேளாண் பயிர்களின் விவரங்கள் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

காப்பீடு பயிர்களும், மாவட்டங்களும் :

மக்காசோளம்

  • திருப்பூர் மற்றும் மதுரை மாவட்டங்கள்

துவரை

  • மதுரை

உளுந்து

  • திருப்பூர் மற்றும் மதுரை

பச்சை பயிறு

  • திருப்பூர் மற்றும் மதுரை

நிலக்கடலை

  • திருப்பூர், மதுரை, விருதுநகர்

பருத்தி

  • திருப்பூர், மதுரை, தரும்புரி, விழுப்புரம்

சோளம்

  • திருப்பூர், திண்டுக்கல்

கம்பு

  • திண்டுக்கல்

எள்ளு

  • திருப்பூர், மதுரை, மற்றும் விருதுநகர்.

இதே, போன்று தோட்டக்லை பயிர்களான வாழை, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களுக்கும் காப்பீடு செய்ய வரும் 31-ம் தேதியே கடைசி நாளாகும்.

மேலும் படிக்க..

Kisan Credit card: கிசான் கிரெடிட் கார்டு கடனை ஆகஸ்ட் 31-க்குள் செலுத்தாவிட்டால் என்ன நடக்கும்?

நெற் பயிர்களை தாக்கும் குலை நோய்: அறிகுறிகளும், நோய் மேலாண்மையும்!!

Sugar free Rice : சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் சுகர் ஃப்ரீ நெல் சாகுபடி! - RNR 15048

குறைந்த செலவில் அதிக மகசூல் பெற மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல்!!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)