மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியில் உளுந்து மற்றும் பாசிப்பயிறு அறுவடை (Harvest) பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாம் பெரும்பாலும் அதிகம் உண்ணும் உணவாக இருப்பது தோசை மற்றும் இட்லி ஆகும். உலகின் பல்வேறு நாட்டு தலைவர்கள் நம் நாட்டிற்கு வருகை தரும் போது, அவர்களுக்கு விருந்து உபசரிப்பு செய்வது நம்முடைய பழக்க வழக்கமாக இருந்து வருகிறது. அந்த விருந்து உபசரிப்பில் இட்லி மற்றும் தோசை கட்டாயம் இடம் பெறும். இந்த இட்லி மற்றும் தோசை தயாரிக்க மிகவும் முக்கிய பொருளாக விளங்குவது உளுந்து ஆகும். அதைபோல் சாம்பார், சுண்டல், மாவு தயாரிக்க என பல்வேறு வடிவங்களிலும், உணவாகவும் பயன்படுவது பாசி பயிராகும். பல்வேறு மருத்துவ குணங்களை (Medical Benefits) கொண்ட இந்த இரண்டு உணவுப் பயிர்களும் தமிழகத்தில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.
சம்பா சாகுபடி
சீர்காழி தாலுகா பகுதியில் சம்பா சாகுபடி நெல் அறுவடைக்கு முன்னர் உளுந்து மற்றும் பாசிப்பயிரை ஊடுபயிராக (Inter croping) விவசாயிகள் தங்கள் வயல்களில் விதைக்கின்றனர். பெரும்பாலான விவசாயிகள் உளுந்து சுமார் 70 நாட்களில் விளைகின்ற இந்த பயிறு வகைகள் விவசாயிகளுக்கு லாபத்தை (Profit) ஈட்டி தந்து வருகின்றது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் சம்பா சாகுபடியில் நெல் அறுவடைக்கு முன்னர் உளுந்து மற்றும் பாசிப்பயிறு விதைப்பு செய்வோம்.
இவ்வாறு சாகுபடி செய்த உளுந்து பயிர் 70 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். ஆனால் இந்த ஆண்டு அதிக மழை பெய்ததால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதால் அறுவடை செய்ய முடியவில்லை. அதனால் உளுந்து மற்றும் பாசிபயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யவில்லை. இருப்பினும் ஒரு சில விவசாயிகள் தங்கள் வயல்களில் சாகுபடி செய்த உளுந்து மற்றும் பாசிப்பயிறுகளை அறுவடை செய்து வருகின்றனர். விளைச்சல் குறைவாக காணப்பட்டாலும், நல்ல விலை கிடைப்பதால் ஓரளவுக்கு விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் என அவர்கள் கூறினர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
தென்னையில் வேரூட்டம் பற்றி விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்!
வெப்ப அயற்சியிலிருந்து கோழிகளைப் பாதுகாக்க தெளிப்பான்களை உபயோகிக்கலாம்! ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்!