மாடுலர் கிச்சனுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள டிசைனர் சிலிண்டரை இந்தியன் ஆயில் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
இந்தியன் ஆயில் (Indian Oil) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு பரிசைக் கொண்டு வந்துள்ளது. இனி, நீங்கள் நிறுவனத்திடமிருந்து வண்ணமயமான டிசைனர் எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவீர்கள். இந்த சிலிண்டர்கள் டிசைனர் சமையலறைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, யார் வேண்டுமானாலும் அவற்றைப் பயன்படுத்தலாம்.
இந்த சிலிண்டரின் சிறப்பு என்னவென்றால், அதில் எவ்வளவு எரிவாயு உள்ளது, எவ்வளவு எரிவாயுவை நாம் எரித்துள்ளோம் என்பதை நீங்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம். இந்த சிலிண்டரின் நன்மைகளை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்- இந்தியன் ஆயில் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் இந்த சிலிண்டர் பற்றிய தகவல்களை குறிப்பிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது., "இது உங்கள் மாடர்ன் கிச்சனுக்கு பொருத்தமாக இருக்கும். இது மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய வகை டிசைனர் எல்பிஜி சிலிண்டர் தற்போது ஹைதராபாத் மற்றும் டெல்லி வாசிகளுக்கு மட்டும் கிடைக்கிறது. இது குறித்த மேலும் தகவலை பெற நீங்கள் அருகிலுள்ள இந்தேன் விநியோகஸ்தரை தொடர்பு கொள்ளலாம்.
5 மற்றும் 10 கிலோ சிலிண்டர்கள் அறிமுகம்
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட டிசைனர் எல்பிஜி சிலிண்டர்களை 5 மற்றும் 10 கிலோ எடையில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதே நேரத்தில், உங்கள் வீடுகளில் பயன்படுத்தப்படும் இரும்பு சிலிண்டர்களில் சுமார் 14.2 கிலோ எரிவாயு உள்ளது. முதன்முறையாக பெயிண்ட் செய்யப்பட்ட புதியவகை டிசைனர் சிலிண்டர்களை கூடிய விரைவில் மக்களிடையே கொண்டு செல்லப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வகை சிலிண்டரின் நன்மைகள் என்ன?
- இந்த எரிவாயு சிலிண்டர் மிகவும் வண்ணமயமான லைட் வெயிட் சிலிண்டர் ஆகும்.
- இது தற்போதுள்ள எஃகு (இரும்பு) எரிவாயு சிலிண்டர்களை விட 50 சதவீதம் இலகுவாக இருக்கும்.
- ஃபைபர் செய்யப்பட்ட கலப்பு சிலிண்டர் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.
- ஃபைபர் செய்யப்பட்ட கலப்பு சிலிண்டர்களில் அதிகபட்சமாக 10 கிலோ எரிவாயு இருக்கும்.
- சிலிண்டரின் சில பகுதிகள் வெளிப்படையானதாக இருக்கும், இதன் காரணமாக சிலிண்டரில் எவ்வளவு எரிவாயு உள்ளது என்பதை பயனர் எளிதாகக் காண முடியும்.
மேலும் படிக்க...
உங்கள் வங்கி கணக்கில் LPG சிலிண்டர் மானியம் ஏறவில்லையா? அப்போ இதை செய்யுங்க.
ரூ.800 மதிப்புள்ள LPG சிலிண்டரை வெறும் 9 ரூபாய்க்கு வாங்கலாம்! எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்!
சமையல் சிலிண்டரின் விலை மேலும் குறைய வாய்ப்பு : மத்திய அமைச்சர் தகவல்!!