1. செய்திகள்

சமையல் சிலிண்டரின் விலை மேலும் குறைய வாய்ப்பு : மத்திய அமைச்சர் தகவல்!!

Sarita Shekar
Sarita Shekar

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாதம்தோறும் முதல் நாள் திருத்தப்பட்டு வரும் நிலையில், நடப்பு மாதமான ஏப்ரல் 1ம் தேதி 10 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பொருட்களின் விலை வீழ்ச்சியடையும் வாய்ப்பைக் கருத்தில் கொண்டு, இது மேலும் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக ஏறுமுகத்தில் இருந்த சமையல் எரிவாயுவின் விலை, புதிய நிதியாண்டு தொடங்கியவுடன் குறையத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது கடந்த இரண்டு மாதங்களில் ரூபாய் 125 உயர்வு கண்ட சமையல் எரிவாயுவின் விலை தற்போது ஏப்ரல் மாத துவக்கத்தில் ரூ.10 குறைக்கப்பட்டுள்து. இது மட்டுமல்லாமல் மேலும் விலை குறையும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்  (Union Petroleum Minister Dharmendra Pradhan) சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், “வரவிருக்கும் நாட்களில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஐி விலை குறையும்” என குறிப்பிட்டா். கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் நகரத்தில் எல்பிஜி விலை என்ன? 

டெல்லியில் சிலிண்டரின் விலை ஏப்ரல் துவக்கத்தில் ரூ.10 குறைக்கப்பட்ட பின்னர், 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டரின்விலை ரூ.819-லிருந்து ரூ.809-ஆகக் குறைந்துள்ளது. மும்பையிலும் இதே விலை தொடர்கிறது. கொல்கத்தாவில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் 845.50 ரூபாய்க்கு பதிலாக 825.50 ரூபாய்க்கும், சென்னையில் 835 ரூபாய்க்கு பதிலாக 825 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

உங்கள் நகரத்தில் எரிவாயு சிலிண்டரின் விலை என்ன என்பதை சரிபார்க்க (https://iocl.com/Products/IndaneGas.aspx) என்ற இணைப்பினை பின்தொடரலாம்.

English Summary: After reducing the price of a cylinder in Delhi by Rs 10, the price of a 14.2 kg LPG cylinder has been reduced from Rs 819 to Rs 809.

Like this article?

Hey! I am Sarita Shekar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.