1. செய்திகள்

ரூ.800 மதிப்புள்ள LPG சிலிண்டரை வெறும் 9 ரூபாய்க்கு வாங்கலாம்! எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்!

KJ Staff
KJ Staff

இந்தியா தற்போது விலை உயர்ந்த நாடாக மாறி உருவெடுத்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஏனென்றால், விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ள பெட்ரோல், டீசல் விலையை (Petrol, diesel prices) தொடர்ந்ந்து தக்காளி, வெங்காயம் என அனைத்து பொருள்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. அந்த வரிசையில் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து சமையல் எரிவாயுவின் விலையும் (LPG Gas) நினைத்து கூட பாக்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

இந்நிலையில், புதிய நிதியாண்டின் முதல் நாளில், LPG கேஸ் சிலிண்டரின் (LPG Gas Cylinder) விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டது. அந்த வகையில் தேசிய தலைநகர் டெல்லியில் மானியமின்றி 14.2 கிலோ LPG சிலிண்டரின் விலை ரூ.809 ஆக குறைக்கப்பட்டது. அதே சமயத்தில் Paytm ஆப் மூலம் எரிவாயு சிலிண்டர் வாங்குபவர்களுக்கு ஒரு சிறப்பு சலுகை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ், நீங்கள் 809 ரூபாய் கேஸ் சிலிண்டரைப் வெறும் 9 ரூபாய்க்கு வாங்கலாம்.

Paytm மூலம் நாம் LPG சிலிண்டரை முன்பதிவு (Cylinder Booking) செய்யும் போது இந்த கேஷ்பேக் (Cashback) சலுகை கிடைக்கிறது. இந்த சலுகையின் கீழ் சிலிண்டரை முன்பதிவு செய்தால் நமக்கு சுமார் 800 ரூபாய் வரை கேஷ்பேக் கிடைக்கும்.
Paytm-யின் இந்த சலுகை 30 ஏப்ரல் 2021 வரை செல்லுபடியாகும்.

Paytm Cashback சலுகையைப் பெறுவது எப்படி?

 • இந்த சலுகையைப் பயன்படுத்த, உங்கள் மொபைலில் Paytm ஆப் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

 • ஆப்பை இன்ஸ்டால் செய்த பிறகு, உங்கள் சிலிண்டரை முன்பதிவு செய்ய வேண்டும்.

 • முதலில், நீங்கள் Paytm-க்குச் சென்று show more என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

 • இதற்குப் பிறகு, Recharge and Pay Bills என்பதைக் கிளிக் செய்க.

 • இதில், நீங்கள் சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான விருப்பத்தை பெறுவீர்கள்.

  இங்கே நீங்கள் உங்கள் எரிவாயு வழங்குநரை தேர் வு செய்ய வேண்டும்.

 • முன்பதிவு செய்வதற்கு முன், நீங்கள் FIRSTLPG இன் விளம்பர குறியீட்டை
  (promo code) உள்ளிட வேண்டும், இதன் மூலம் நீங்கள் கேஷ்பேக் வசதியைப் பெற முடியும்.

 • இந்த கேஷ்பேக் சலுகை 30 ஏப்ரல் 2021 அன்று காலாவதியாகிறது. முன்பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் கேஷ்பேக் கீறல் அட்டை (scratch card) கிடைக்கும். இந்த கீறல் அட்டையை 7 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.

 

மெட்ரோ நகரங்களில் LPG விலை

எல்பிஜி சிலிண்டரின் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மானியமின்றி 14.2 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை டெல்லியில் ரூ .809 ஆகவும், கொல்கத்தாவில்
ரூ.835.50 ஆகவும், மும்பையில் ரூ.809 ஆகவும், சென்னையில் ரூ.825 ஆக உள்ளது.

19 கிலோ வணிக எரிவாயு விலையில் மாற்றம் இல்லை, டெல்லியில் 19 கிலோ வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1641, கொல்கத்தாவில் ரூ.1713, மும்பையில்
ரூ.1590.50, சென்னையில் ரூ.1771.50 ஆக உள்ளது.

எனவே இந்த இக்கட்டான கால கட்டத்தில் , உங்கள் சமையல் ஏறிபாயும் சிலிண்டரை இந்த சலுகையின் கீழ் முன்பத்தி செய்து இந்த மாத சேவலில் 800 ரூபாயை மிச்சப்படுத்துங்கள்.

மேலும் படிக்க...

கூலித்தொழிலாளியா நீங்கள் ? இந்தத்திட்டத்தில் சேர்ந்தால், மாதம் ரூ.3000 பென்ஷன் கிடைக்கும்!

M-Kisan 8-வது தவணை - உங்களுக்கு வந்ததா? இல்லையா? உறுதிசெய்துகொள்ள எளிய வழி!

English Summary: Learn how to buy an LPG cylinder worth Rs 800 for just Rs 9 throught Paytm Cashback offer

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.