இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (IIT Madras), தலைமை மேலாளர் பணியிடங்களுக்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்படிவத்தை ஆன்லைன் மூலம் அனுப்பலாம். எவ்வாறு விண்ணப்பிப்பது மற்றும் வேலை பற்றிய முழு விவரங்களை இப்பதிவு விளக்குகிறது.
தலைமை மேலாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நாள் கடந்த மே 17 ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அனுப்ப கடைசி தேதி மே 27 எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, டிகிரி படித்த, வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்படிவத்தை மே 27 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும்.
சென்னை, இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் தலைமை மேலாளர் பதிவிகளுக்கு விண்ணப்பங்களை பூர்த்திச் செய்ய வேண்டிய இணைய தளம் https://www.iitm.ac.in.ஆகும். இந்த பதவிகளுக்கான கல்வித்தகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகஞ்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் டிஜிட்டல் மீடியா மேனேஸ்மெண்ட், இதழியல், மாஸ் கமியூனிகேஷன் அல்லது டிஜிட்டல் அட்வர்டைசிங் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னை IIT-யில் படித்த பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
பணி அனுபவமமாகச் சந்தைப்படுத்தல் தொடர்பு மற்றும் வர்த்தக வர்த்தகத்தை நிர்வகிப்பதில் ஐந்து முதல் பத்து வருடங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை IIT -யில் மேலே குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 1,00,000 முதல் ரூ. 1,50,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் ஒவ்வொரு விண்ணப்பதாரர்களும் எழுத்துத் தேர்வினை முதலி எழுத வேண்டும். அதன் பிறகும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு திறன் சோதனை நடைபெறும். இவற்றில் தேர்வு பெறும் விண்ணப்பதாரர்களுக்கு இறுதியில் நேர்காணல் நடைபெறும். இவற்றில் தேர்ச்சிப் பெற்றவர்கள் தலைமை மேலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சென்னை IIT-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான iitm.ac.in/careers மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இறுதி நாள் மே 27 ஆகும். அதற்குள் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துப் பயன் அடையுங்கள்.
மேலும் படிக்க