1. Blogs

பெங்களூரைச் சுற்றி உள்ள 5 பிரபலமான இடங்கள்!

Poonguzhali R
Poonguzhali R
5 Popular Places Around Bangalore!

மேகமூட்டமான வானம் மற்றும் மலைப்பகுதி போன்ற வெப்பநிலையின் கீழ் பெங்களூரு இருப்பதால், நகரத்தின் அழகையும் அதன் சுற்றுப்புறத்தையும் ரசிக்க ஒரு சரியான வழி என்றால், உங்கள் சைக்கிளை எடுத்து வெளியைச் சுற்றி வருவதுதான். சைக்கிளிங் என்பது மனதுக்கு அமைதியையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கக் கூடிய ஒன்று ஆகும். அந்த நிலையில் பெங்களூரிலும் அதைச் சுற்றிலும் ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன. அவற்றை இந்த பதிவு விளக்குகிறது.

நந்தி மலை (Nandi Hills)

பெங்களூருக்கு அருகிலுள்ள மிகவும் பிரபலமான வார இறுதி ஸ்தலங்களில் ஒன்று நந்தி ஹில்ஸ் (நந்திமலை) ஆகும். இயற்கை மற்றும் சாகச ஆர்வலர்களிடையே மிகவும் பிரபலமான தலம் ஆகும். பச்சை மலைகளுக்கு இடையே செங்குத்தான மலையேற்றம் மூச்சடைக்கக்கூடிய காட்சிகளை வழங்குகிறது. நந்தி ஹில்ஸ் ஒரு நிறுவப்பட்ட சைக்கிள் பாதையைக் கொண்டுள்ளது. மேலும் மேலே செல்லும் வழியில் பல வளைவுகள் இருப்பதால், அது பயணத்திற்குச் சவாலானதாக இருந்தாலும், பார்வைக்கு மிகுந்த மகிழ்வைத் தரக் கூடியது ஆகும். இறங்கும் போது மலையிலிருந்து அவசர அவசரமாக கீழே இறங்கும் சுகம் கூடுதல் மகிழ்வு ஆகும். இந்தப் பாதையில் சைக்கிள் ஓட்ட விரும்புவோர், தண்ணீர், ஹெல்மெட், முழங்கால் பட்டைகள் மற்றும் முழங்கை பட்டைகள் உள்ளிட்டவைகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஹெசரகட்டா (Hesaraghatta)

வடக்கு பெங்களூருக்கு அருகில் உள்ள இந்த 15 கிமீ நீளமுள்ள சைக்கிள் ஓட்டும் பாதை, சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்களுக்கு புகலிடமாக உள்ளது. இது ஜலஹள்ளி விமானப்படை நிலையத்திற்கு அருகில் தொடங்கி, இயற்கை எழில் கொஞ்சும் ஹெசரகட்டா ஏரியில் முடிவடைகிறது. இங்கு, சைக்கிள் ஓட்டுபவர்கள் அதிக போக்குவரத்து நெரிசலை சந்திக்காமல் பசுமையான மற்றும் அமைதியான சாலைகளில் பயணிக்கலாம். மேலும் வழியில் நின்று சுற்றியுள்ள வயல்களில் சில சிறந்த புகைப்படங்களைக் கிளிக் செய்யலாம்.

துரஹல்லி (Turahalli)

தெற்கு பெங்களூரில் உள்ள இந்த வனப்பகுதி சாகச மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்களுக்குப் பிரபலமானது ஆகும். வார இறுதிகளில் ஏராளமான ஓட்டப்பந்தய வீரர்கள், சைக்கிள் ஓட்டுபவர்கள் இந்த பாதையை தேர்ந்தெடுத்துச் செல்கின்றனர். நகர்ப்புற பெங்களூருக்கு இடையே உள்ள பசுமையான இடம் உங்கள் சைக்கிள் சக்கரங்களைக் கொண்டு சுற்றுவதற்கு ஒரு சிறந்த இடமாக இருக்கும். இங்கு சிற்றுண்டி, உணவு மற்றும் தண்ணீர் வசதிகள் எளிதில் கிடைக்கின்றன எனக் கூறப்படுகிறது.

மஞ்சனபெலே அணை (Manchanabele Dam)

இந்த அணை பெங்களூருவில் இருந்து சவுந்துர்கா செல்லும் வழியில் சுமார் 40 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அர்காவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அமைதியான நீர்த்தேக்கம், பறவைகளை பார்ப்பதற்கும், மிக நீண்ட பயணத்திற்கு செல்வதற்கும் சிறந்த இடமாகும். இங்குள்ள சாலைகள் சீரானவையாக உள்ளது. அதிக வாகனப் போக்குவரத்து இல்லை.

பைப்லைன் படிக்கட்டு ஆச்சரியம் (Pipeline Staircase Surprise)

நைஸ் பெரிஃபெரல் சாலைக்கு வெளியே தெற்கு பெங்களூருவை நோக்கி ஹோசபாளையா அருகே முடிவடையும் இந்த சைக்கிள் பாதை, சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு மிகவும் பிடித்த வழி எனக் கூறப்படுகிறது. இந்த சாலைப் பயணம் சுமார் 2-3 மணிநேரம் ஆகலாம். பெங்களூரின் புறநகர்ப் பகுதிகள் வழியாக, மென்மையான, அமைதியான சவாரிக்கு உகந்தது.

சைக்களில் சுற்றுப்பயணம் செய்ய விரும்பும் பயணிகள் இந்த இடங்களுக்குச் சென்று நன்றாக காலத்தைப் பயனுள்ளதாக மாற்றுங்கள்.

மேலும் படிக்க

திருப்பூரில் வட்டெழுத்து கல்பலகை கண்டெடுப்பு!

கர்ப்பக் காலத்தில் சுடு தண்ணீரைக் குடிக்கலாமா?

English Summary: 5 Popular Places Around Bangalore! Published on: 19 May 2022, 03:39 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.