நம் குழந்தைகள் நன்கு வளர்ந்து, பெரியவர்களாகி, சமூகத்தில் அந்தஸ்து உள்ளவர்களாக உயர வேண்டும் என்பதுதான் பெற்றோரின் அனுதின வேண்டுதலாக இருக்கும். அதிலும் பெண் ழந்தைகளைப்பெற்றவர்களுக்கு, அந்தக் குழந்தையின் கல்யாண செலவு என்பது கனவு மட்டுமல்லாமல், பொருளாதார சுமையாகவும் மாறிவிடுகிறது.
என்னதான், படித்து, ஆணுக்கு நிகராக பெண்ணும் சம்பாதிப்பவளாக இருந்தாலும், மாப்பிள்ளை வீட்டார் மெய்ச்சும் அளவுக்கு மகள் ஆசைப்படும் நகையை சீதனமாக செய்ய வேண்டியது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. அப்படி தன் மகளின் கல்யாணத்திற்காக கனவு காண்பவரா நீங்கள்? உங்களைப் போன்றோரின் கனவை நனவாக்கவே மத்திய அரசின் நிறுவனமான LIC தனிப் பாலிசியைக் கொண்டுள்ளது.
பாலிசி (Policy)
இந்த பாலிசியின் பெயர் LIC கன்னியாதன் (Kanyadhan ). இந்த பாலிசிக்கு நீங்கள் அனுதினமும் ரூ.121யை பிரீமியமாகச் செலுத்தினால் போதும். அதாவது மாதத்திற்கு ரூ.3600. இதைவிடக் குறைந்த தொகையை பிரிமீயமாகச் செலுத்தும் வசதியும் உண்டு. நீங்கள் அதையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நீங்கள் தினமும் ரூ.121யைச் செலுத்தினால், 25 ஆண்டுகள் கழித்து உங்களுக்கு ரூ.27 லட்சம் கிடைக்கும்.
காப்பீடும் உண்டு (Insurance)
எதிர்பாராதவிதமாக பாலிசிதாரர் இறக்கும் பட்சத்தில், அந்த குடும்பத்தினர் பிரீமியம் தொகையை செலுத்தத் தேவையில்லை. இந்த குடும்பத்திற்கு ஆண்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
வயது மற்றும் தகுதி (Age and Qualification)
LIC கன்னியாதன் பாலிசியைப் பொருத்தவரை வயது மிக மிக முக்கியமானது. 30 வயது உடையவர்கள் மட்டுமே இந்த பாலிசியை போட முடியும். மேலும் அவர்களது பெண் குழந்தைக்கு ஒரு வயதிற்குள் இருந்தால் மட்டுமே பாலிசியை எடுக்க முடியும்.
ஏனெனில், 25 ஆண்டுகளுக்கு பிறகுதான் பாலிசி முதிர்ச்சி அடையும். ஆனால், நீங்கள் 22 ஆண்டுகள் மட்டுமே பிரிமீயம் செலுத்தினால் போதும். அதேநேரத்தில், பெண் குழந்தையின் வயதிற்கு ஏற்றவாறு, பிரிமீயம் செலுத்தும் காலஅளவும் மாறுபடும்.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents)
-
ஆதார் அட்டை
-
வருமான சான்றிதழ்
-
பிறப்பு சான்றிதழ்
-
அடையாள சான்று
-
இருப்பிடச் சான்று
-
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
-
விண்ணப்ப படிவம்
-
முதல் மாத பிரிமீயத்திற்கான காசோலை(Cheque)
13 ஆண்டு பாலிசி (13 years Policy)
இந்த பாசிலியை 13 ஆண்டுகளுக்கு செலுத்தும் வசதியும் உண்டு. இதன் மூலம் உங்கள் குழந்தையின் கல்விச் செலவையும் சமாளித்துக்கொள்ள முடியும்.
பாலிசி போடுவது எப்படி? (How to apply)
அருகில் உள்ள LIC அலுவலம் அல்லது LIC ஏஜெண்ட்டை அணுகி, LIC கன்னியாதன் பாலிசி குறித்தக் கூடுதல் விபரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு பாலிசியைப் போடலாம்.
மேலும் படிக்க...
10 ரூபாய் நாணயத்திற்கு 10% தள்ளுபடி- ஓட்டல் உரிமையாளரின் அதிரடிச் சலுகை!
புங்கன் நடவுக்கு ரூ.21,000 மானியம் - வேளாண்துறை அறிவிப்பு
மகசூலை பாதிக்கும் பூச்சிகள்- இயற்கை முறையில் துவம்சம் செய்ய எளிய வழிகள்!