ஒரு அதிகாரியின் கூற்றுப்படி, மத்தியப் பிரதேச அரசு இரண்டு வருட காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் மாநில தினை மிஷன் திட்டத்தை செயல்படுத்த செவ்வாய்க்கிழமை தீர்மானித்துள்ளது. இந்த தினை மிஷன் திட்டமானது மத்தியப் பிரதேசத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் 80% மானியத்துடன் தொடங்கப்பட உள்ளது.
இந்தியாவின் முன்மொழிவு மற்றும் கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு, ஐக்கிய நாடுகள் சபை 2023 ஆம் ஆண்டை ‘சர்வதேச தினை ஆண்டாக’ அறிவித்தது.
இதனிடையே மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இரண்டு வருட காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் மாநில தினை மிஷன் திட்டத்தை செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விவசாயிகள் நலன் மற்றும் வேளாண்மைத் துறையின் மூலம் மாநிலத்தின் தினை மிஷன் திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
அரசு எடுத்த முடிவுகளின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளில் (2023-24 மற்றும் 2024-25) மொத்தம் ரூ.23.25 கோடி இத்திட்டத்திற்காக செலவிடப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் விதை கூட்டுறவு மற்றும் அரசு நிறுவனங்கள் மூலம் 80% மானியத்தில் தர சான்றளிக்கப்பட்ட தினை விதைகளைப் பெறுவார்கள்.
அதிகாரியின் கூற்றுப்படி, இந்த பணியை செயல்படுத்துவதை மேற்பார்வையிட மாநில விவசாய உற்பத்தி ஆணையரின் கீழ் ஒரு குழு அமைக்கப்படும். தினை சாகுபடி, பதப்படுத்துதல் மற்றும் வணிகமயமாக்கல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் இந்த முயற்சி பரவலாக சந்தைப்படுத்தப்படும். அதுமட்டுமின்றி, விவசாயிகளுக்கு ஆய்வுப் பயணங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு, கண்காட்சிகள், பயிலரங்குகள், கருத்தரங்குகள், உணவுத் திருவிழாக்கள் ஆகியவற்றில் பங்குப்பெற திட்டமிடப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.
மதிய உணவு அல்லது இரவு உணவு வழங்கப்படும் எந்தவொரு அரசாங்க திட்டங்கள் மற்றும் நிகழ்வுகளிலும், தினை கொண்ட ஒரு உணவு வழங்கப்படும் என்றும், தங்கும் விடுதிகளில் மதிய உணவில் வாரம் ஒரு முறை தினை உணவுகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச திணை ஆண்டினை ஒரு உலகளாவிய இயக்கமாக ஊக்குவிக்க இந்தியா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் 12-13 மாநிலங்களில் தினை முதன்மையாக விளைகிறது. இருப்பினும், அந்த குறிப்பிட்ட மாநிலங்களில், ஒரு நபரின் உள்நாட்டு நுகர்வு மாதத்திற்கு 2-3 கிலோவுக்கு மேல் இதற்கு முன் இல்லை. தற்போது மாதம் 14 கிலோவாக அதிகரித்துள்ளது” என்று அண்மையில் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
நாட்டில் உள்ள 2.5 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பயனளிப்பதோடு, உணவு பாதுகாப்பு சவால்களை கையாள்வதில் தினைகள் முக்கிய பங்காற்ற முடியும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
குத்தகை நில விவசாயிகளுக்கு லாபத்தை தரும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம்!