மதுரையில் மெட்ரோ சேவை குறித்த மெட்ரோ அறிக்கையை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 31 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு, திருமங்கலத்தை ஒத்தக்கடையுடன் இணைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
மெட்ரோ திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்க ஆலோசகர் நியமிக்கப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) அறிவித்துள்ள நிலையில், மதுரையில் மெட்ரோ திட்டம் விரைவில் நிறைவேற உள்ளது.
மேலும் படிக்க: மக்களே குட்நியூஸ்! தங்கம் விலை தொடர்ந்து சரிவு!!
திட்டத்திற்கான ஆலோசகர்களைத் தேடும் டெண்டரை CMRL வெளியிட்டுள்ளது. மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் (PTR), தனது முதல் பட்ஜெட் விளக்கக்காட்சியின் போது, பல மெட்ரோ ரயில் விரிவாக்கங்களின் ஒரு பகுதியாக மதுரை மெட்ரோ திட்டத்தை அறிவித்தார்.
மதுரையில் உருவாக்கப்பட உள்ள மெட்ரோலைட் அமைப்பிற்கான சாத்தியக்கூறு அறிக்கையைச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சமீபத்தில் சமர்ப்பித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாத்தியக்கூறு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், விரைவில் ஆலோசகருக்கான டெண்டர் விடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிபிஆருக்கு ஏலம் எடுக்க ஆர்வமுள்ளவர்கள் மார்ச் 13 வரை விண்ணப்பிக்கலாம். மதுரையில் வரவிருக்கும் திட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய மூன்று விஷயங்களாகக் கீழ்வருவன கூறப்படுகின்றன.
முதலவதாக, மெட்ரோ ரெயில் மொத்தம் 31 கிலோமீட்டர் தூரத்தை கடந்து திருமங்கலத்தை ஒத்தக்கடையுடன் இணைக்கும். திருமங்கலத்தில் 45 ஏக்கர் நிலப்பரப்பில் மெட்ரோ ரெயிலுக்கான டெப்போவும் அமைக்கப்பட உள்ளது.
இரண்டாவதாக, திருமங்கலம், கப்பலூர் சுங்கச்சாவடி, தர்மத்துப்பட்டி, தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், பசுமலை, வசந்தா நகர், மதுரா கல்லூரி, மதுரை சந்திப்பு ரயில் நிலையம், சிம்மக்கல், கீழவாசல், தெற்குவாசல், கோரிப்பாளையம், காவல் ஆணையர் அலுவலகம் ஆகிய 20 நிலையங்கள் மெட்ரோ ரயில் திட்டத்துக்குத் திட்டமிடப்பட்டுள்ளன. புதூர், மாட்டுத்தாவணி, ஊத்தங்குடி, உயர்நீதிமன்ற பெஞ்ச் மற்றும் ஒத்தக்கடை முதலானவையும் கூறப்படுகின்றன.
மூன்றாவதாக, மெட்ரோ ரயில்களில் மூன்று பெட்டிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரயில் மணிக்கு 25 கிமீ வேகத்தில் இயக்கப்படும் மற்றும் அதிகபட்ச வேகம் மணிக்கு 60 கிமீ இருக்கும். ஒத்தக்கடை - கோரிப்பாளையம் இடையே உயர்மட்டப் பாதையும், கோரிப்பாளையம் - வசந்தா நகர் இடையே நிலத்தடிப் பாதையும் அமைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க