1. செய்திகள்

இனி இந்த பொருட்களுக்கு GST வரி குறைவு!

Poonguzhali R
Poonguzhali R

Now GST is less for these products!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 49வது GST கவுன்சில் கூட்டம் பிப்ரவரி 18 ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் சில பொருட்களுக்கு GST வரி குறைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் காணலாம்.

மேலும் படிக்க: சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பஞ்சாயத்து தலைவர்கள் பிடித்து பராமரிக்க உத்தரவு!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 49வது GST கவுன்சில் கூட்டத்தில் பென்சில் ஷார்பனர்கள், திரவ வெல்லத்தின் மீதான ஜிஎஸ்டி விகிதத்தினைக் குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதில் பென்சில் ஷார்பனர்களுக்கான GST விகிதத்தை 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகக் குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புக்கொண்டு இருக்கிறது. அதோடு, திரவ வெல்லத்தின் மீதானGST விகிதத்தை 18 சதவீதத்தில் இருந்து பூஜ்யம் அல்லது 5 சதவீதமாகக் குறைக்கவும் முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் படிக்க: மின்சாரமில்லாத இருசக்கர வாகனங்களுக்கு ஆப்பு வைத்த சண்டிகர் நிர்வாகம்

GST கவுன்சில் கூட்டத்தில், மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் அமைப்பது குறித்தும், பான் மசாலா மற்றும் குட்கா வணிகங்களில் வரி ஏய்ப்பைத் தடுப்பது குறித்தும் நிதியமைச்சர் பேசி இருக்கிறார். மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் பற்றிப் பேசிய சீதாராமன், GoM அறிக்கை ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், அறிக்கையில் சிறிய மாற்றங்கள் தேவை எனவும் தெரிவித்து இருக்கிறார்.

பென்சில் ஷார்ப்னர்களுக்கான GST வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைந்து இருக்கிறது. அதோடு, டேக் டிராக்கிங் சாதனங்கள் அல்லது டேட்டா லாகர்கள் மீது GSTகுறைக்கப்பட்டுள்ளது, அவை நீடித்த கொள்கலன்களில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 18% முதல் பூஜ்யம் வரை GST வரியானது குறைக்கப்படும்”என்று அமைச்சர் செய்தியாளர் சந்திப்பின் போது கூறி இருக்கிறார்.

ராப் என்பது ஒரு வகையான திரவ வெல்லம், இது உ.பி மற்றும் பிற வெல்லம் உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு மிகவும் பொதுவானது எனவும், ராபின் மீதான GST விகிதத்தைக் கவுன்சில் 18% இல் இருந்து பூஜ்யம் அல்லது 5% ஆகக் குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் படிக்க

விவசாயத்துறையில் இளைஞர்கள் அதிகளவில் பங்களிக்கவும்-ஒன்றிய அமைச்சர் தோமர் வேண்டுக்கோள்

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: உடனே தெரிந்து கொள்ளுங்கள்!

English Summary: Now GST is less for these products!

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.