மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 April, 2022 11:23 AM IST
Minister for Labour Welfare New announcements........

அதை தொடர்ந்து, 11 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் திறப்பு, முறைசாரா பணியாளர்கள் சேவை செயலி உருவாக்கம், உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம் என திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சில முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார்.

  • இளைஞர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்க 11 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும்.
  • அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழில் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்.
  • அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயன்படுத்த முடியாத மற்றும் பழுதுபார்க்க முடியாத இயந்திரங்கள், கருவிகள் மற்றும் உபகரணங்கள் மாற்றப்பட்டு, புதியவை வழங்கப்படும்.

  • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்.

  • தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோமொபைல் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த, 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்சா வாங்குவதற்கு தலா 1 லட்சம் வழங்கப்படும்.

  • தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் விபத்து காரணமாக மரணம் அடைந்தால், அவர்களது குடும்பங்களுக்கு தற்போதைய விபத்து இறப்பு உதவித்தொகை 1 லட்சம் ரூபாயிலிருந்து 2 லச்சமாக உயர்ந்துள்ளது.

  • தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்களுக்கான தற்போதைய மகப்பேறு நல உதவித் தொகை 6,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்வு.

  • தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் தற்போதைய திருமண நல உதவித் தொகையை 20,000 ரூபாயாக உயர்ந்தியுள்ளது.

  • முறைசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்யப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்காக "முறைசாரா தொழிலாளர் சேவை செயலி" உருவாக்கப்படும்.

  • அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு QR குறியீடு மற்றும் சிப் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

  • தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோமொபைல் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த பெண் தொழிலாளர்களுக்கான மகப்பேறு நல உதவித்தொகை தற்போதைய 6,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது.

  • தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோமொபைல் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் 16 நல வாரியங்களுக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டப்படும்.

  • தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய சங்க நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் தங்கும் வகையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஓய்வு இல்லமான ஜீவா இல்லம், கூடுதல் படுக்கை வசதிகளுடன் புதுப்பிக்கப்படும்.

  • செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள்.

  • கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்.

  • பட்டாசு தயாரிப்பில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வீடியோ தயாரிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்படும்.

  • தன்னார்வ கற்றல் வட்டங்களுக்கு ஸ்மார்ட் போர்டு வசதி உருவாக்கப்படும்.

  • துறையின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் துறையின் இணையதளம் மறுவடிவமைப்பு செய்யப்படும்.

  • தேசிய திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு சிறப்பு திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

  • திறன் பயிற்சியாளர்கள் மற்றும் மதிப்பீட்டாளர்களின் திறன் தொகுப்பு தமிழகத்தில் உருவாக்கப்படும்.

மேலும் படிக்க:

PMEGP : ஆட்டோ வாங்க ரூ.5 லட்சம் வரை கடன்- மத்திய அரசு வழங்குகிறது!

CNG Subsidy மற்றும் கட்டண திருத்தம் கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்

English Summary: New announcements for Tamil Nadu government-female drivers to buy an auto!
Published on: 27 April 2022, 11:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now