பிரதமர் குடியிருப்பு திட்டம் : மானிய தொகை ரூ. 2.75 லட்சமாக அதிகரிப்பு!!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Credit : dailyexcelsior

பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தமிழக அரசால் மேற்கூரை அமைக்க கூடுதலாக வழங்கப்பட்ட பங்குத்தொகை ரூ.50ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் மானிய தொகை ரூ. 2.75 லட்சமாக உயர்த்தப்பட்டுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (Pradhan Mantri Awas Yojana) (ஊரகம்) மத்திய அரசு பங்களிப்புடன் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2016-17 முதல் 2019-20ஆம் ஆண்டுவரை இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 8 ஆயிரத்து 968 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 5 லட்சத்து 27 ஆயிரத்து 552 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 4,01,848 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் (ஊரகம்) கீழ் ஒரு வீட்டிற்கான அலகுத் தொகை ரூ.1,20,000 ஆகும். இதில் மத்திய அரசின் பங்குத் தொகை ரூ.72,000/- மற்றும் மாநில அரசின் பங்குத் தொகை ரூ.48,000/- ஆகும். இத்துடன் கான்கிரீட் மேற்கூரை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு, கூடுதல் நிதியாக ரூ.50,000/- ஒவ்வொரு வீட்டிற்கும் அளித்து வருகிறது.

இத்தொகையுடன் ஒரு வீட்டிற்கான மொத்த அலகு தொகை ரூ.1,70,000 ஆகும். இந்த அலகுத் தொகையுடன் கூடுதலாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில் 90 மனித சக்தி நாட்களுக்கான ஊதியம் ரூ.23,040/- மற்றும் தனி நபர் இல்லக் கழிப்பறை கட்டும் பணிக்கு ரூ.12,000/- ஒருங்கிணைந்து வழங்கப்படுகிறது. 

சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க 70% மானியம் - விண்ணப்பிக்க அழைப்பு!!

இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து என்னால் ஆய்வு செய்யப்பட்டது. தற்போது கட்டுமானப் பொருள்களின் விலையேற்றம் காரணமாகவும், கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாலும், மேற்கண்ட அலகுத் தொகையினைக் கொண்டு ஏழை எளிய மக்கள் வீட்டினை கட்ட இயலாத நிலை உள்ளதாகவும், தகுதியான குடும்பங்கள் வீடுகளை தாங்களே கட்ட இயலாத நிலையில் உள்ளதாகவும் எனது ஆய்வில் தெரிய வந்தது.

எனவே ஏழை எளிய மக்களின் கனவான குடியிருப்பு வீடுகட்டுவதை உறுதிப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசால் ஏற்கனவே மேற்கூரை அமைக்க கூடுதலாக வழங்கப்பட்டு வந்த ரூ.50,000/- ஐ உயர்த்தி ரூ.1,20,000/- வழங்க உத்தரவிட்டுள்ளேன். இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் அலகு தொகை ரூ1,70,000/- லிருந்து ரூ.2,40,000/- ஆக உயர்த்தப்படுகிறது. இந்த தொகையுடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.23,040/- மற்றும் தனி நபர் இல்லக் கழிப்பறை கட்ட ரூ.12,000/- சேர்த்து மொத்தம் ஒரு வீட்டிற்கு ரூ.2,75,040/- வழங்கப்படும்.

ஓரே கிளிக் மூலம் 9 கோடி விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2000 : 25ம் தேதி விடுவிப்பு!! 

இதற்காக தமிழ்நாடு அரசால் கூடுதலாக ரூ.1805.48 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதனால் சுமார் 2,50,000 பயனாளிகள் பயன் பெறுவர். இந்த கூடுதல் நிதி உதவியால் கட்டி முடிக்காமல் உள்ள வீடுகள் கட்டி முடிக்கப்படுவதுடன், தாங்களே கட்ட வசதியில்லாத பயனாளிகளுக்கும் வீடுகள் ஒதுக்கப்பட்டு, தமிழ்நாடு ஊரக வீட்டுவசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக் கழகத்தின் உதவியோடு கட்டி முடிக்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

பொங்கல் பரிசு ரூ.2,500/- வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்!!

English Summary: Pradhan Mantri Awas Yojana Subsidy Price increased to 2 lakh 75 Thousand in Tamilnadu Published on: 23 December 2020, 07:26 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.