தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச சைக்கிளகள் வழங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்துப் புதிதாக வெளிவந்த தகவலை இப்பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மேலும் படிக்க: அங்காடிகளில் பொருட்களைக் குறைந்த விலையில் விற்க உத்தரவு!
தமிழகத்தில் விரைவில் 6 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளதாக மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு! பெரிய ஏற்றம்!!
ராமநாதபுரம் மாவட்டப் பள்ளி கல்வித்துறை சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்கான, ‘நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இது கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், உயர்கல்வி வழிகாட்டி கையேட்டை வெளியிட்டு சிறப்புரை வழங்கினார்.
மேலும் படிக்க: TNEB: இலவச விவசாய மின் இணைப்புக்கு இன்றே விண்ணப்பியுங்கள்? விவரம் உள்ளே!
அப்போது அவர் உரையாற்றியபோது தமிழகத்தில் கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி திட்டம் நன்கு உருவெடுத்து வருகிறது எனக் கூறினார். அதோடு, பெண்கள் அதிகளவில் உயர்கல்வி கற்க வேண்டும் என்பதற்காக ரூ.1000 வழங்கும் திட்டம், விரைவில் முதல்வரால் தொடங்கப்பட உள்ளது என்பதைக் குறித்தும் விரிவாகப் பேசினார்.
மேலும் படிக்க: TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்வழி இடஒதுக்கீடு சர்ச்சை!
இந்தியாவில் உள்ள 100 சதவீதம் கல்வி பயில்வோரில், தமிழகத்தில் மட்டும் 30 சதவீதம் பேர் உயர்கல்வி கற்கின்றனர் என்பதைக் குறித்துப் பேசிய அவர், விரைவில் மாணவர்களுக்கு 6 லட்சம் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வழங்கியுள்ளார்.
மேலும் படிக்க
தங்கம் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு! தங்கம் விலை அதிகரிக்குமா?