மாணவியருக்கு உயர்கல்வி உறுதித்தொகை ரூ.1,000 என அறிவுப்பு வெளிவந்தது. இந்த் அறிவிப்பினால பலர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த தொகை எப்போது கைக்கு வரும் என்ற அப்டேட் வந்துள்ளது. இதைக் குறித்து விளக்குகிறது இந்த பதிவு.
மேலும் படிக்க: பெண்களுக்கு இலவசத் தையல் இயந்திரம் தரும் மத்திய அரசு! இன்றே விண்ணப்பியுங்கள்!!
முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை ஒட்டிப் பள்ளி மாணவிகளுடன் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு குறித்தான உறுதிமொழி எடுத்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்றுச் சிறப்பு செயத போதுதான் இந்த ரூ. 1000 நிதியைக் குறித்துப் புதிய அப்டேட்-ஐக் கொடுத்துள்ளார்.
மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!
நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன், முதியோர்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது என்றும் அது விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார். வருகிற 5 ஆண்டுகளில் முதியோர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும் என்பதால் தொலைநோக்குடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், முதியோர் இல்லங்களே இருக்க கூடாது என்பதே அரசின் எண்ணம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க: 50% மானியத்தில் டிராக்டர் வழங்கும் மத்திய அரசின் திட்டம்! இன்றே அப்ளை செய்யுங்க.!
இதைத் தொடர்ந்து பேசிய அவர், 1-5 ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார் என்ற தகவலையும் கூறியிருக்கிறார். மேலும் மாணவியருக்கு உயர்கல்வி உறுதித்தொகை ரூ.1,000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.
கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்ட உடன், ரூ.1,000 உறுதித்தொகை நேரடியாக மாணவியரின் வங்கிக்கணக்குக்கு செலுத்தப்படும் என்றும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க: தினமும் 7 ரூபாய் சேமித்து 60,000 பென்சன் பெறும் சூப்பர் திட்டம்!
அதோடு, அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி நடத்துவது குறித்த தெளிவான விளக்கத்தைக் கல்வித்துறை கொடுத்துவிட்டது என்பதையும், சமூக நலத்துறை சார்பில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி நடத்தப்படவில்லை என்பதையும் அமைச்சர் கீதா ஜீவன் தனது உரையில் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க
அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய விலை நிலவரம்!
NABARD: நபார்டு வங்கியில் வேலைவாய்ப்பு! சம்பளம் எவ்வளவு தெரியுமா?