News

Sunday, 03 July 2022 11:16 AM , by: Poonguzhali R

Through Co-operative Bank Rs.1000 Scholarship for Students!

அரசு பள்ளிகளில் படித்துக் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தில், தகுதியான மாணவிகள், ஜூன் 25ம் தேதி முதல் விண்ணப்பித்த நிலையில் தற்போது எப்படி இந்த தொகையை பெற முடியும் எனப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

மேலும் படிக்க: புது அப்டேட்: விரைவில் 6 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்!

தமிழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ. 1000 உதவித் தொகை வழங்குவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது குறித்த முழு தகவல்களைப் பள்ளி மாணவிகள் பெறச் சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: TNEB: இலவச விவசாய மின் இணைப்புக்கு இன்றே விண்ணப்பியுங்கள்? விவரம் உள்ளே!

இந்நிலையில், உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ. 1000 உதவித் தொகை வழங்க்கும் திட்டத்திற்கான நிதியை, கூட்டுறவு வங்கிகள் வழியாக வழங்க, தமிழக அரசு திட்டமிட்டு இருக்கின்றது. கூட்டுறவுத் துறையின் கீழ் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் இருகின்றன. அந்த வங்கிகளுக்கு மாநிலம் முழுவதும் 910 கிளைகள் செயல்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு! பெரிய ஏற்றம்!!

தனியார் வங்கிகளுக்கு நிகராக, இணையதளம், மொபைல் போன் செயலியில் வங்கிச் சேவை எனப் பல்வேறு தொல்ழிநுட்ப வசதிகள் கூட்டுறவு வங்கிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக அரசு, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவியர் உயர் கல்வியில் சேருவதை ஊக்கப்படுத்தும் வகையில் மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த இருக்கின்றது.

மேலும் படிக்க: TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்வழி இடஒதுக்கீடு சர்ச்சை!

அரசின் இந்த திட்டத்தினை கூட்டுறவு வங்கிகள் வழியாக வழங்க அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இதற்கென மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாணமை இயக்குனர்கள், மண்டல் இணைப் பதிவாளர்கள் ஆகியோருடன், கூட்டுறவு துறை உயர்திகாரிகள் நாளை 3.30 மணியளவில் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

மேலும் படிக்க

தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்குத் தடை: அதிரடி உத்தரவு!

தங்கம் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு! தங்கம் விலை அதிகரிக்குமா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)