வேளாண் சட்டங்கள் தொடர்பான தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காவிட்டால், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாய சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியின் எல்லையில், தொடர்ந்து இரண்டு வாரங்களாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அமைச்சர்களுடன் நடந்த பல கட்டப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து 8ம் தேதி நாடு தழுவிய பந்த் நடத்தப்பட்டது. 11 மாநிங்களில் நடத்தப்பட்ட இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் அமோக ஆதரவு அளித்தன.
தமிழகத்தில் நடத்தப்பட்ட போராட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் களம் இறங்கின. இருப்பினும் பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி முழுஅடைப்புப் போராட்டம் அமைதியாக நடந்து முடிந்தது.
இந்நிலையில், பஞ்சாப் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் டில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால், படிப்படியாக போராட்டம் தீவிரப்படுத்தப்படும். டெல்லியை நாட்டின் பிற நகரங்களுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் முடக்கப்படும்.
வேளாண்மை என்பது அரசமைப்பு சட்டத்தின்படி, மாநில பட்டியலில் உள்ளது. இதன்படி, வேளாண் சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளதே தவிர, மத்திய அரசுக்கு இல்லை. எனவே எங்கள் கோரிக்கைகளை உடனடியாக ஏற்காவிட்டால், ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்படும். இருப்பினும் போராட்டம் நடத்தப்படும் தேதியை, ஆலோசித்து முடிவெடுத்து, விரைவில் அறிவிப்போம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க...
10 ரூபாய் நாணயத்திற்கு 10% தள்ளுபடி- ஓட்டல் உரிமையாளரின் அதிரடிச் சலுகை!
புங்கன் நடவுக்கு ரூ.21,000 மானியம் - வேளாண்துறை அறிவிப்பு
மகசூலை பாதிக்கும் பூச்சிகள்- இயற்கை முறையில் துவம்சம் செய்ய எளிய வழிகள்!