ரேஷன் கடைகளில் அட்டைகளை பயன்படுத்தி சிலர் மோசடி செய்து வந்தனர். அவர்களை தடுக்கும் பொருட்டாகவும் மோசடிகள் நடைபெறுவதை குறைக்கவும் கைரேகை படிவுமுறை அனைத்து ரேஷன் கடைகளிலும் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் எழுந்ததை தொடர்ந்து இந்த முறை கைவிடப்பட்டது. காற்றிலும் பரவக்கூடிய இந்த கொரோனா பெருந்தொற்று கைரேகை வைக்கும் இடத்திலிருந்தும் பரவலாம் என்பதால் நிறுத்தப்பட்டது.
தினமும் 200 பேர் ரேஷன்கடைகளுக்கு வந்துசெல்லும் பட்சத்தில் ஒருவரின் கைரேகை பதிவானதும் அடுத்தவரும் அதே இடத்தில் கைரேகை வைத்தால் பெரிய அளவில் பாதிக்கும் வாய்ப்பு உருவாக வாய்ப்பிருந்தது. இந்த முறை நிறுத்தப்பட்டு அட்டைகள் மூலம் பதியும் பழைய நடைமுறை தான் ஆறு மாதங்களுக்கு மேலாகவும் நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் குறைந்துவிட்டதால் மீண்டும் கைரேகை முறை நாளை முதல் அமலாவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில், கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பொருட்டு மே 21 மற்றும் ஜூன் 21 மாதங்களில் 4 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதனை பெறுவதற்காக மக்கள் வரும்போது நியாய விலை கடைகளுக்கு கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும் தாமதமின்றி நிவாரணத் தொகை மற்றும் தொகுப்பு பயனையும் பெற்று செல்ல ஏதுவாக கைவிரல் ரேகை பதிப்பின் நடவடிக்கை நிறுத்தம் ஏற்பட்டது. தற்போது நிவாரண உதவித் தொகை 98.59 சதவீதமும் மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு 93.99 சதவீதம் வரை வழங்கப்பட்டுள்ளது
புதிய மனுக்களை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு கூற வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும் நோய்த்தொற்று பரவல் காரணமாக பல பணியாளர்களால் விசாரணைக்கு செல்ல இயலாத சூழ்நிலை காரணமாகவும் தகுதியான மனுக்களை ஒப்புதல் அளிப்பதற்கான சேவையும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் புதிய அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவை, புதிய அட்டை அச்சிடும் பணியை மேற்கொள்வதற்கும், கைரேகை பதிவு முறையை மீண்டும் அமல்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இம்மாத இறுதிக்குள் முழுவதுமாக விநியோகம் முடிக்கப்படும் நிலையில் உள்ளதால் நாளை முதல் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவை ,புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணியை மேற்கொள்வதற்கும் மற்றும் கைவிரல் ரேகை படிப்பினையும் நீல செயல்முறை படுத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க
விண்ணப்பித்த 15 நாளில் புதிய ரேஷன் கார்டு - ஆளுநர் உரையில் தகவல்!!
4 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து - குடும்ப அட்டைதாரர்கள் அதிர்ச்சி!