பெட்ரோல், டீசல் கொள்முதல் கிடையாது என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை, எண்ணெய் நிறுவனங்கள் ஈடுசெய்ய வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை நடத்துகின்றனர். இதன்படி மே 31ம்தேதியான இன்று பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தப்படுகிறது.
விளிம்புத் தொகை
இது குறித்து, தமிழக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க தலைவர் முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சில்லரை விற்பனையாளர்களுக்கு, 2017ல் இருந்து இதுவரை விளிம்புத் தொகையை அதிகரித்து வழங்கவில்லை.
சிறப்பு கலால் வரி
2017ல், லிட்டர், 60 ரூபாயாக இருந்த பெட்ரோல் தற்போது, 104 ரூபாயாக உள்ளது. டீசல் லிட்டர், 52 ரூபாயில் இருந்து, 96 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதனால், எங்களது நடைமுறை மூலதனம் உயர்ந்து, பெட்ரோலிய பொருட்கள் கொள்முதல் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. விற்பனையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் விளிம்புத் தொகையாக பெட்ரோலுக்கு, 3.06 ரூபாயும்; டீசலுக்கு, 1.88 ரூபாயும் வழங்குகின்றன.
இந்த விளிம்பு தொகையில், 70 சதவீதம் நிர்வாக செலவினங்களுக்கு செலவிடப்படுகிறது. விளிம்பு தொகை கட்டமைப்பு, 2010ல் உள்ள செலவினங்களுக்கான கணக்கீட்டை உள்ளடக்கியது. 13 ஆண்டுகளாகியும் அதே நிலை உள்ளது.மே 21ம் தேதி மத்தியஅரசால் குறைத்து அறிவிக்கப்பட்ட சிறப்பு கலால் வரியால், தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு, 9.12 ரூபாயும், டீசல் லிட்டருக்கு, 6.68 ரூபாயும் எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தன.
சில்லரை விலை குறைப்பு
இதனால், அன்று 2 லட்சம் ரூபாய் முதல், 10 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது. எனவே, 2021 நவ., மற்றும் இம்மாதம், 21ம் தேதி சில்லரை விலை குறைப்பால் ஏற்பட்ட இழப்பை, முதன்மை உரிமையாளர் என்ற அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் விற்பனையாளர்களுக்கு ஈடுசெய்ய வேண்டும்.
கொள்முதல் நிறுத்தம்
இது குறித்து, எண்ணெய் நிறுவனங்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், செவ்வாய் கிழமை (31.05.22) ஒரு நாள் மட்டும்,பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்வதை நிறுத்த உள்ளோம். பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி, பெட்ரோல், டீசல் விற்பனை தொடர்ந்து நடக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!
Indian Air Forceஸில் வேலை - பிளஸ் 2 படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!