இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 8 September, 2021 3:01 PM IST
Agricultural electricity connections

விவசாயிகளின் நலனை மேம்படுத்த ஒரு லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

அறிவிப்புகள்:

  • மாநிலத்தின் விவசாய உற்பத்தியை பெருக்கி, விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடன், ஒரு லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
  • மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழகத்தில் கிடைக்கப்பெறும் அபரிமிதமான சூரிய சக்தியை கொண்டு மின்சாரம் தயாரிக்கும், 'சூரிய மின் சக்தி பூங்கா'வை மாவட்டந்தோறும் நிறுவ உள்ளது
  • தனியார் நிறுவனங்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை குறைத்து, சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து, அவற்றின் வாயிலாக 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் மெகா வாட் சூரிய மின் உற்பத்தி மற்றும் 10 ஆயிரம் மெகா வாட் மின் கலன்கள் சேமிப்பு செய்து, மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • முதல் கட்டமாக 4,000 மெகா வாட் திறன் உள்ள சூரிய சக்தி மின் நிலையங்கள் மற்றும், 2,000 மெகா வாட் திறனுள்ள மின் கலன்கள் சேமிப்பு திட்டம் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்
  • சென்னை எண்ணுாரில், 2,000 மெகா வாட் அளவுக்கு சிறிய அளவிலான திறன் கொண்ட அதிக எண்ணிக்கையிலான எரிவாயு இயந்திர மின் திட்டத்தை, சாத்தியக்கூறு அடிப்படையில் நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோதையாற்றில், 500 மெகா வாட் நீரேற்று மின் திட்டம் அமைக்கப்படும்

Also Read | ஒரே நாளில் 1 கோடி டோஸ்: 3-வது முறையாக இந்தியா சாதனை!

  • தேனியில் உள்ள மணலாற்றில், 500 மெகா வாட் நீரேற்று மின் திட்டம் அமைக்கப்படும்
  • எரிபொருள் வினியோக ஒப்பந்தம் வாயிலாக வழங்கப்படாத நிலக்கரியின் ஒரு பகுதியை, நிலக்கரி சுரங்கங்களுக்கு அருகில் உள்ள தற்சார்பு மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கி, அதற்கு ஈடாக மின் கொள்முதல் செய்து கொள்ளும் திட்டம் உள்ளது. அதன்படி, மகா நதி நிலக்கரி நிறுவனத்திடம் இருந்து வழங்கப்படாத நிலக்கரியை, அருகில் உள்ள மின் நிலையங்களுக்கு வழங்கி, அதற்கு ஈடாக 1,000 மெகா வாட் வரை மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
  • அனைத்து மின் இணைப்புகளிலும் தற்போது உள்ள மின் அளவிகள், 'ஸ்மார்ட் மீட்டர்' (Smart Meter) எனப்படும் வினைத் திறன்மிகு மின் அளவிகளாக மாற்றம் செய்யப்படும். இந்த மின் அளவி பொருத்துவதால், மின் நுகர்வோர், தம் மின் பயன்பாட்டை எந்நேரமும் கண்காணிக்க முடியும்* மாநிலத்தில் 159 புதிய துணை மின் நிலையங்கள், 1,979 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்
  • சென்னை மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் மின் பாதைகளை, புதைவடங்களாக மாற்றி செயலாக்கத்திற்கு கொண்டு வரப்படும்.இவ்வாறு செந்தில் பாலாஜி அறிவித்தார்.

Read More

இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை: ஆக்ஸிஜன் தயாரிப்பு மும்முரம்

வாட்ஸ்ஆப் சேவை விரைவில் நிறுத்தம்: மொபைல் பயனாளர்களே உஷார்!

English Summary: One lakh new agricultural electricity connections: Minister announces!
Published on: 08 September 2021, 03:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now