1. செய்திகள்

ஒரே நாளில் 1 கோடி டோஸ்: 3-வது முறையாக இந்தியா சாதனை!

R. Balakrishnan
R. Balakrishnan
1 crore dose in one day

கொரோனா தடுப்பூசி போடும் பணிகளில் கடந்த 11 நாட்களில் மூன்றாம் முறையாக ஒரே நாளில் ஒரு கோடி 'டோஸ்' என்ற எண்ணிக்கையை நாம் கடந்துள்ளோம் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 கோடி டோஸ்

மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டுள்ள 'டுவிட்டர்' பதிவு: மீண்டும் ஒரே நாளில் ஒரு கோடி டோசுக்கும் அதிகமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. கடந்த 11 நாட்களில் மூன்றாவது முறையாக இந்த சாதனையை நாம் எட்டியுள்ளோம். பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) தலைமையின் கீழ் நாம் மேற்கொண்டுள்ள தடுப்பூசி இயக்கப்பணிகள் மிகப்பெரிய உயரத்தை எட்டுகின்றன. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இதன்படி நேற்று ஒரே நாளில் 1.05 கோடி டோசுக்கும் அதிகமாக கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) செலுத்தப்பட்டு உள்ளது. ஒட்டு மொத்தமாக நேற்று வரை 53.29 கோடி பேருக்கும் மேல் முதல் டோஸ் மற்றும் 16.39 கோடிக்கும் மேற்பட்டோருக்கு இரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் 18 - 44 வயதிற்கு உட்பட்டோரில் 27.64 கோடி பேர் முதல் டோஸ் மற்றும் 3.57 கோடி பேர் இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு உள்ளனர்.

ஆக்சிஜன்

கோவிட் மூன்றாவது அலை இந்தியாவில் பரவ உள்ளதாக ஐசிஎம்ஆர் (ICMR) விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்சிஜன் சிலிண்டர்களை (Oxygen Cylinder) தயாரிக்க இந்தியா அரசு முடிவெடுத்துள்ளது. ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டன் ஆக்சிஜன் தயாரிக்கப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி

மாணவர்களின் கல்வி மற்றும் உளவியல் நலனுக்காக, பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதை பெற்றோரும், ஆசிரியர்களும் உணர்ந்து, அனைவரும் முக கவசம் (Mask) அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், இதர பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி, நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த உதவிட வேண்டும்.

மேலும் படிக்க

கர்நாடகாவில் சொதப்பல்: சில நிமிடங்களில் இளைஞருக்கு 2 முறை தடுப்பூசி!

இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை: ஆக்ஸிஜன் தயாரிப்பு மும்முரம்

English Summary: 1 crore dose in one day: India record for the 3rd time! Published on: 07 September 2021, 06:39 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.