1. மற்றவை

வாட்ஸ்ஆப் சேவை விரைவில் நிறுத்தம்: மொபைல் பயனாளர்களே உஷார்!

R. Balakrishnan
R. Balakrishnan

WhatsApp service to be discontinued

பழைய ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் வெர்ஷன்கள் கொண்ட மொபைல் போன்களில், வரும் நவ., 1ம் தேதிக்கு பின் சேவையை நிறுத்தப்போவதாக வாட்ஸ் ஆப் (Whatsapp) நிறுவனம் அறிவித்துள்ளது.

வாட்ஸ் ஆப்

யாஹூவின் முன்னாள் ஊழியர்களான பிரையன் ஆக்டன் மற்றும் ஜான் ஆகியோரால் 2009ல் வாட்ஸ்ஆப் ஆரம்பிக்கப்பட்டது. அதற்குமுன் பேஸ்புக் தான் இணைய உலகின் சமூக வலைதள ராஜாவாக இருந்தது. வாட்ஸ்ஆப்பின் வருகைக்குப் பின், உலகமே வாட்ஸ்ஆப் மயமானது. எதிர்காலத்தில் வாட்ஸ்ஆப் பேஸ்புக்கை ஓரங்கட்டும் என எண்ணிய மார்க் சக்கர்பெர்க், வாட்ஸ்ஆப் நிறுவனத்தை 2014ம் ஆண்டு, 19 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். ஒவ்வொரு நாளும் வாட்ஸ்ஆப்-பின் பயனாளர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். தொடர்ந்து, புதுப்புது அப்டேட்டுகளையும் வாட்ஸ்ஆப் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்து உள்ளதாவது: ஆண்ட்ராய்டு 4.0.3 இயங்கு தளத்திற்குக் கீழ் உள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஐஓஎஸ் 9 இயங்கு தளத்திற்கு கீழ் உள்ள வெர்ஷன் கொண்ட ஐபோன்களில் வாட்ஸ்ஆப் வரும் செப்., 1ம் தேதி முதல் இயங்காது. இந்த வகை போன்களும் எங்களுக்கு முக்கியம் என்றாலும், எதிர்கால சேவைக்கு இந்த வகை போன்களில் தொழில் நுட்ப வசதி இல்லை. அதனால் இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டி உள்ளது.

இந்த போன்களில், வாட்ஸ்ஆப் சேவையை பயன்படுத்தி வரும் பயனர்களின் பழைய கணக்கு செயல்படாது. அதேபோல் அந்த போன்களில் புதிய வாட்ஸ்ஆப் கணக்குகளை உருவாக்கவும் முடியாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மொபைல் மாடல் 

சாம்சங் மாடல் மொபைல்போன்களில் சாம்சங் கேலக்சி டிரெண்ட் லைட், கேலக்சி டிரெண்ட்II, கேலக்சி எஸ்II, கேலக்சி எஸ்3 மினி, கேலக்சி எக்ஸ்கவர் 2, கேலக்சி கோர்,கேலக்சி ஏசிஇ2

எல்ஜி மாடல் மொபைல் போன்களில் லூசிட்2, எல்ஜி ஆப்டிமஸ் எப்7, எல்ஜி ஆப்டிமஸ் எப்5, ஆப்டிமஸ் எல்3 II டியூயல், ஆப்டிமஸ் எப்5, ஆப்டிமஸ் எல்5, ஆப்டிமஸ் எல் 5II, ஆப்டிமஸ் எல் 5 டியூயல், ஆப்டிமஸ் எல் 3 II,ஆப்டிமஸ் எல்7, ஆப்டிமஸ் எல்7II டியூயல், ஆப்டிமஸ் எல் 7 II, ஆப்டிமஸ் எப்6,எனாக்ட், ஆப்டிமஸ் எல் 4 II டியூயல், ஆப்டிமஸ் எப்3, ஆப்டிமஸ் எல் 4 II, ஆப்டிமஸ் எல் 2 II, ஆப்டிமஸ் நைட்ரோ எச்டி மற்றும் 4 எக்ஸ் எச்டி, ஆப்டிமஸ் எப்3கியூ

சீன நிறுவனமான இசட் டி இ மாடல்களின் இசட் டி இ கிராண்ட் எஸ் பிளக்ஸ், இசட் டி இ வி956, கிராண்ட் எக்ஸ் குவாட் வி 987 மற்றும் இசட் டி இ கிராண்ட் மெமோ

ஹூவாயின் ஆஸ்செண்ட் ஜி740 ஆஸ்செண்ட் மேட், ஆஸ்செண்ட் டி குவாட் எக்ஸ் எல், ஆண்செண்ட் பி1 எஸ் மற்றும் ஆஸ்செண்ட் டி2

சோனி எக்ஸ்பீரியா மைரோ, சோனி எக்ஸ்பீரியா நியோ எல், எக்ஸ்பிரியா ஆர்க்4 உள்ளிட்ட வகைகளை சேர்ந்த போன்களில் நவ.,1க்கு பிறகு வாட்ஸ் ஆப் செயல்படாது.

மேலும் படிக்க

விலையேற்றத்தால் கசக்கிறது இனிக்கும் காபி!

வைரலாகும் வீடியோ: சிறுத்தையை எதிர்த்து நின்ற பூனை!

English Summary: WhatsApp service to be discontinued soon: Mobile users beware!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.