தற்போதுள்ள payment app-களுடன் நீங்கள் மகிழ்ச்சியடையவில்லை என்றால், கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் தற்போதைய payment app'களுக்கு போட்டியாக இந்திய சந்தையில் டிஜிட்டல் கட்டணத்தை (digital payment) ஊக்குவிக்க புதிய app தொடங்கப்பட உள்ளது. முன்னணி தொழில்நுட்ப சாதன தயாரிப்பு நிறுவனம் வெளியிடவிருக்கும் இந்த payment app, இந்திய சந்தையில் நுழைவதற்கான அனைத்து பணிகளையும் முடித்துள்ளது.
புதியதொரு app-ஐ அறிமுகம் செய்யும் oneplus!
தகவல்கள் படி, சீன மொபைல் உற்பத்தியாளர் ஒன்பிளஸ் (ONE PLUS) மிக விரைவில் இந்திய சந்தையில் PAYMENT APP ஒன்றினை அறிமுகப்படுத்த உள்ளது. டிஜிட்டல் கட்டண (DIGITAL PAYMENT) சந்தையில் நுழைவதற்கான தயாரிப்புகளை இந்நிறுவனம் முடித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில், oneplus-க்கு கிடைத்தது வர்த்தக முத்திரை (TRADEMARK)
கிடைக்கப்பெற்ற தகவல்கள் படி, இந்தியாவில் புதிய கட்டண (PAYMENT APP) பயன்பாட்டை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு ஒன்பிளஸின் சிறப்பான trademark feature நிறைய விவாதிக்கப்படுகிறது. நிறுவனம் இந்த புதிய feature'ரய் தனது operating system OxygenOS'ஸில் விண்ணப்பித்துள்ளது. கிடைத்த தகவல்களின்படி, ஒன்பிளஸுக்கு புதிய வர்த்தக முத்திரை (TRADEMARK) கிடைத்துள்ளது.
APP-ன் பெயர் "ONEPLUS PAY"
ஒன்பிளஸின் புதிய payment aap-ன் பெயர் "oneplus pay" என்று பெயரிடப்படும் என்று கூறப்படுகிறது. இந்த கட்டண பயன்பாடு (payment aap) தற்போதைய சந்தையில் Google Pay, Paytm, PhonePe மற்றும் WhatsApp Payment போன்ற பெரிய பயன்பாடுகளுடன் போட்டியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கூடிய சீக்கரம் தொடங்கும்.... "ONEPLUS PAY" !!
ஒன்பிளஸின் புதிய கட்டண பயன்பாடு (PAYMENT APP) இந்த மாதத்தின் இறுதியில் தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து நிறுவனம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.
சீன மொபைல் உற்பத்தியாளர் ஒன்பிளஸ், இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து வகையான பிரிவுகளிலும் நுழைய முயற்சிக்கிறது. ஆரம்ப ஆண்டுகளில், நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை( smartphones) அறிமுகப்படுத்தியது. இப்போது நிறுவனம் ஸ்மார்ட் டிவி (smart tv) மற்றும் ஸ்மார்ட் வாட்ச் (smart watch) பிரிவிலும் நுழைந்துள்ளது. இந்த வரிசையில் தற்போது வணிக சந்தையில் கால்பதிக்க முயற்சிக்கிறது.
நிறுவனம் ஏற்கனவே இந்த சேவையை சீனாவில் தோடங்கியுள்ள நிலையில், கூடிய விரைவில் ஒன்பிளஸ் பே (ONEPLUS PAY) இந்தியாவுக்கு வருகை புரியும் என கூறப்படுகிறது.
எனினும் தற்போதைய சந்தையில் இருக்கும் Google Pay, Paytm, PhonePe மற்றும் WhatsApp Payment போன்ற app-களுடன் இந்த ONEPLUS PAY APP-பையும் மக்கள் விரும்பி பயன்படுத்துவார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பான் அட்டைத் தொலைந்துவிட்டதா? கவலைவேண்டாம்! ஆன்லைனில் மறுபிரதி எடுத்துக்கொள்ள வழிமுறைகள்!