1. செய்திகள்

பான் அட்டைத் தொலைந்துவிட்டதா? கவலைவேண்டாம்! ஆன்லைனில் மறுபிரதி எடுத்துக்கொள்ள வழிமுறைகள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Lost your Pan Card

Credit: The better india

மத்திய மாநில அரசுகளின் பெரும்பாலான திட்டங்களின் பயனை நாம் அடைய வேண்டுமானால், அதற்கு (Pan Card) எனப்படும் பான் அட்டை என்பது மிக மிக முக்கியம்.

ஒரு வங்கிக்கணக்கு தொடங்குவதாக இருந்தாலும் சரி, அதில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்வதாக இருந்தாலும் சரி, பான் அட்டை இல்லாமல் இது எதையும் செய்ய இயலாது.

நிதிப்பரிமாற்றத்திற்கு பணம் இருக்கிறதோ, இல்லையோ, பான் அட்டை இருக்க வேண்டியது கட்டாயம்.

அவ்வளவு இன்றியமையாத பான் அட்டையை நாம் தொலைத்துவிட்டால் மிகுந்த கவலைக்கு ஆளாவோம். இந்தக் கவலையைப் போக்கும் விதமாக, நீங்களே உங்கள் பான் அட்டையை ஆன்லைன் மூலம் மீண்டும் அச்சிட்டுக்கொள்ளும் (Reprint) வசதி வந்துவிட்டது.

Credit: Twitter

அதற்கான வழிமுறைகள்

 • நீங்கள் இணையதளம் மூலம் TIN websiteற்குள் https://www.tin-nsdl.com (Tax Information Network of the Income Tax Department) செல்லவும்.

 • அங்கு Reprint Pan Card என்னும் optionயை கிளிக் செய்யவும். அதில் Reprint Your Card என்பதைத் தேர்வு செய்யவும்.

 • அவ்வாறு செல்ல முடியவில்லை என்றால், அங்கிருந்து Services என்ற Tabயைக் கிளிக் செய்யவும். பிறகு, Pan என்ற Optionனுக்குள் செல்லவும்.

 • PAN optionயைத் தேர்வு செய்யும் போது, நீங்கள் இணையதளத்தின் புதிய பக்கத்திற்குள் செல்வீர்கள்.

 • அங்கு PAN அட்டை குறித்த தகவல்கள், ஆதார் அட்டை, பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும்.

 • அங்கு தெரியும் பெட்டிக்குள் சரி எனப்படும் Tikயைத் கிளிக் செய்தால், உங்கள் ஆதார் எண் அடிப்படையில் PAN Cardயை Reprint செய்வது எளிதாகிவிடும்.

 • இவ்வாறு உங்களது PAN cardயை மீண்டும் அச்சடித்துக் கொள்வதற்கு 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

Credit: The Indian Expert

 • இதைத்தொடர்ந்து திரையில் தோன்றும் captcha codeயைப் பார்த்து அப்படியே நிரப்பி submit optionயைக் கிளிக் செய்ய வேண்டும்.

 • பிறகு நீங்கள் OTP பெறுவதற்கு உங்களது email idயோ, அலைபேசி எண்ணையோ அல்லது இரண்டையுமே Type பண்ணவும்.

 • இது, முன்பு நீங்கள் PAN card பெறும் போது அளித்த அதே தகவலாக இருக்கவேண்டும்.

 • புதிய email idயோ, அலைபேசி எண்ணையோ அளிக்க விரும்பினால் அதற்கும் இங்கு வசதி உள்ளது. அதையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

 • இவை அனைத்தையும் பூர்த்தி செய்தபிறகு, Reprint optionயைத் தேர்வு செய்து அளித்தத் தகவல்களை உறுதி செய்யவும்.

 • பின்னர் Generate OTP optionயைக் கிளிக் செய்யவும்.

 • உங்கள் mobile number and email idக்கு வந்த OTP எண்ணை Type செய்து Submit கொடுக்கவும்.

 • இந்த OTPயின் செயல்பாட்டுக்கான காலஅவகாசம் 10 நிமிடங்கள்தான் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

 • OTP உறுதி செய்யப்பட்டவுடன், Make Paymentக்குள் செல்லவும். அங்கு 50 ரூபாயைச் செலுத்தியவுடன் Pay Confirmயைக் கிளிக் பண்ணவும்.

 • வெற்றிகரமாக வங்கிப் பணப்பரிவர்த்தனை முடிவடைந்தவுடன், பணம் செலுத்தியதற்கான ரசீது Payment receipt optionயைக் கிளிக் செய்யவும்.

 • இந்த அனைத்து பரிவர்த்தனைகளும் நிறைவடைந்தபிறகு, நீங்கள் பதிவு செய்துள்ள அலைபேசி எண்ணிற்கு, எஸ்.எம்.எஸ் வரும்.

 • அதில் கொடுக்கப்பட்டுள்ள Linkயைக் கொண்டு, e-PAN cardயை நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும் படிக்க...

எஸ்பிஐ வாரிவழங்கும் வேளாண் தங்கக் கடன் - எளிதில் பெறுவதற்கான வழிமுறைகள்!

வேளாண் பழமொழிகள்! தெரியுமா உங்களுக்கு?

English Summary: Lost your PAN card? do not worry! Simple steps to make a backup online!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.