News

Monday, 26 June 2023 03:27 PM , by: Poonguzhali R

PM Kisan Rs.2000! New update released!

மத்திய அரசின் PM Kisan திட்டத்தில் பயனடைய விவசாயிகளுக்கு தமிழகத்தில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. PM Kisan குறித்த சிறப்பு விழிப்புணர்வு நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த கூடுதல் தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.

மேலும் படிக்க: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு, 4 இடங்களில் அதீத வெப்பம்

 

மத்திய அரசு PM Kisan திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு மூன்று முறை ரூபாய் 2000 வீதம் மொத்தமாக ரூ.6000 எனும் தொகையில் விவசாய பொருட்கள் வாங்குவதற்காக வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களின் ஆதார் கார்டுடன் வங்கி கணக்கை இணைப்பதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க: காய்கறி பயிரிட மானியம்|புகையிலைக்கு மாற்றாக காய்கறி|ஏக்கருக்கு 8000 ரூபாய்!

இதுவரை மொத்தம் 13 தவணை தொகை அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் விரைவில் 14-வது தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தின் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் கண்கரா வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் 11229 விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருவதாகத் தகவல் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் படிக்க: மெக்கானிக் வேலை செய்வோர்களுக்கு அறிய வாய்ப்பு: Uzhavan App வரப்போகும் புதிய வசதி

மேலும் இதில் eKyc மற்றும் நில ஆவணங்கள் பதிவேற்றம் போன்ற பணிகளை முடிக்காமல் உள்ள விவசாயிகளுக்காக மாவட்டத்தில் இன்று முதல் அடுத்து வரும் சில நாட்களுக்கு குறிப்பிட்ட பகுதி வாரியாகச் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து இருக்கிறார்.

அதன்படி இன்று ஊட்டி வட்டாரத்தில் ஊட்டி இத்தலார் வேளாண் கிடங்கு அலுவலகத்தில் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. வருகின்ற சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு விவசாயிகள் பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி இருக்கிறார்.

மேலும் படிக்க

பத்திரிக்கையாளர் பென்சன் ரூ.12000 ஆக உயர்வு|ரூ.1,58,88,000 நிதி|அரசு ஆணை வெளியீடு!

காவிரி தண்ணீர் வெளியேற்றம்|குறுவை சாகுபடிக்கு நீர் வரவு|நாகை வந்தது காவிரி நீர்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)