1. செய்திகள்

பத்திரிக்கையாளர் பென்சன் ரூ.12000 ஆக உயர்வு|ரூ.1,58,88,000 நிதி|அரசு ஆணை வெளியீடு!

Poonguzhali R
Poonguzhali R
Journalist Penson hiked to Rs.12000|Rs.1,58,88,000 fund|Government order issued!

பத்திரிக்கையாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.10000 லிருந்து ரூ.2000 உயர்த்தப்பட்டு ரூ.12000 ஆக வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கென முன் ஒப்புதலாக ரூ. 1,58,88,000 -யினை நிதி ஒப்பளிப்பு செய்துள்ளது.

மேலும் படிக்க: ரூ.14000 கோடி பயிர்கடன்|நடப்பு ஆண்டு குறுவை சாகுபடி|தமிழகக் கூட்டுறவுத்துறை இலக்கு!

பணியிலிருந்து ஓய்வு பெற்று வறுமை நிலையில் உள்ள பத்திரிக்கையாளர்களின் சமூகப் பணியினைக் கருத்தில் கொண்டு நலிவடியந்த பத்திரிக்கையாளர்களுக்கு நிதி உதவி அளிக்க வகை செய்து மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் திட்டம் கடந்த ஏபரம் 1986 முதல் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டம் தொடங்கப்பட்ட போது ரூ.250 ஓய்வூதியமாக வழங்கப்பட்டது.

மேலும் படிக்க: குறுவை சாகுபடி|மேட்டூர் அணை திறப்பு|காவிரி தண்ணீர்|மயிலாடுதுறை வந்தடைந்தது!

இத்தொகையே படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்பொழுது ரூ.10000 வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இத்தொகை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.10000 உதவித்தொகையானது தற்பொழுது ரூ.2000 உயர்த்தப்பட்டு ரூ.12000 ஆக வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க: 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, பிளஸ் 2 துணைத் தேர்வு என்ன ஆச்சு?

2023-24 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தொடரில் கடந்த ஏபரல் 10 ஆம் தேதி அன்று, தமிழக செய்தித்தொடர்பு துறை அமைச்சர், செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான அறிவிப்புகளில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டினை முன்னிட்டு பத்திரிக்கையாளர் ஓய்வூதியம் மாதம் ரூ.12000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்ததைத் தொடர்ந்து இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: TNEA: 2.28 லட்சம் பேர் விண்ணப்பிப்பு! ஜூன் 26-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல்!!

அரசின் பரிசீலனைக்குப் பின்பு தற்பொழுது பத்திரிக்கையாளர்களுக்கான் ஓய்வூதியமானது ரூ.10000-லிருந்து ரூ.12000 ஆக உயர்த்தியும், இதற்கான கூடுதல் செலவினத்திருக்கு என ரூ.1,58,88,000 நிதி ஒப்பளிப்பு செய்தும் அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

மண்ணில் நைட்ரஜனை இயற்கையாக சேர்ப்பது எப்படி? விவரம் உள்ளே!

துவரம் மற்றும் உளுத்தம் பருப்பு- அக்.31 வரை ஒன்றிய அரசு கடும் உத்தரவு

English Summary: Journalist Penson hiked to Rs.12000|Rs.1,58,88,000 fund|Government order issued! Published on: 21 June 2023, 02:31 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.