நாட்டின் முதுகெலும்பு என்று கூறப்படும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவற்றுள் மிகமுக்கியமான திட்டமாக இருப்பது பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM-KISAN) திட்டமாகும்.
இந்த திட்டத்தின் கீழ் நாட்டில் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயி குடும்பங்களும் ஒரு நிதியாண்டில் ரூ.6000 நிதியானது மூன்று சம தவணைகளில் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 என்று பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2019 பிப்ரவரியில் PM-KISAN திட்டம் துவக்கப்பட்ட போது சுமார் 1 கோடி விவசாயிகளின் பேங்க் அக்கவுண்ட்களில் நேரடியாக தலா ரூ.2,000 செலுத்தி இந்த திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி. அதிலிருந்து தகுதி வாய்ந்த விவசாயிகள் இந்த திட்டத்தில் சேரும் பட்சத்தில், ஒரு நிதி ஆண்டில் 3 முறை அவர்களின் பேங்க் அக்கவுண்டில் PM KISAN தவணை நிதி தலா ரூ.2,000 வீதம் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 11 தவணை நிதி விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 10-வது தவணை நிதி ஏற்கனவே இந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி வழங்கப்பட்ட நிலையில், அடுத்து 11-ஆம் தவணை நிதிக்காக விவசாயிகள் ஆவலாக காத்திருந்தார்கள். இதனை தொடர்ந்து கடந்த மே 31, 2022 அன்று பிரதமர் நரேந்திர மோடி, PM-Kisan திட்டத்தின் 11-வது தவணையாக 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.21,000 கோடி நிதியை வழங்கினார்.
PM கிசான் திட்டத்தின் கீழ் 12-வது தவணை நிதி எப்போது வெளியிடப்படும்.?
PM கிசான் திட்டத்தின் 12-வது தவணை நிதியானது வரும் செப்டம்பர் 1, 2022-க்குப் பிறகு வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. பொதுவாக ஒரு நிதியாண்டில் முதல் தவணை ஏப்ரல் முதல் ஜூலை வரையிலும், இரண்டாவது தவணை ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலும், மூன்றாவது டிசம்பர் முதல் மார்ச் வரையிலும் இருக்கும். மத்திய அரசு ஏற்கனவே eKYC காலக்கெடுவை மே 31-லிருந்து ஜூலை 31 வரை நீடித்தது.
மேலும் படிக்க