1. செய்திகள்

TVS: ரூ.1.49 லட்சம் புதிய சூப்பர் பைக் அறிமுகம், விவரம்

T. Vigneshwaran
T. Vigneshwaran
TVS Ronin

TVS Motor நிறுவனம் தனது முதல் நியோ-ரெட்ரோ ரோட்ஸ்டரான புதிய டிவிஎஸ் ரோனின் (TVS Ronin) பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள TVS Ronin மொத்தம் 3 வேரியன்ட்களில் வருகிறது. இவற்றின் விலை ரூ. 1.49 லட்சத்திலிருந்து ரூ. 1.71 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதன் பேஸ் வேரியன்ட் விலை ரூ.1.49 லட்சத்திலும், பேஸ் பிளஸ் வேரியன்ட்டின் விலை ரூ.1.56 லட்சத்திலும், மிட் வேரியன்ட்டின் விலை ரூ.1.69-1.71 லட்சத்திலும் தொடங்குகிறது. முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் Ronin பைக் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் 225.9 சிசி, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் மற்றும் புதிய ஸ்பிலிட் டூயல்-கிராடில் ஃப்ரேம் கொண்ட பிளாட்ஃபார்மில் அறிவிக்கப்படும் பல மாடல்களில் TVS Ronin பைக்கே முதன்மையானது. இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ள எஞ்சின் 7,750 ஆர்பிஎம்-மில் 20.1 பிஎச்பி பவரையும், 3,750 ஆர்பிஎம்-மில் 19.93 என்எம் பீக் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.

TVS இன் இந்த புதிய எஞ்சின் ஆயில்-கூல்டு மற்றும் ஐஎஸ்ஜியைப் பெறுகிறது. மணிக்கு 120 கிமீ வேகத்தில் TVS Ronin செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் இன்ஜின் 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த ரோனின் பைக் அர்பன் அட்வெஞ்சர்ஸ்காகவே கடினமான சாலைகளில் சிறப்பாக செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது. இந்த பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஃபுல் டிஜிட்டல் மற்றும் TVS SmartXonnect சிஸ்டம் மூலம் புளூடூத் கனெக்டிவிட்டியை கொண்டுள்ளது, பல கனெக்டெடட் அம்சங்களை வழங்குகிறது.

TVS Ronin 225-ல் உள்ள SmartXonnect சிஸ்டம் சைட் ஸ்டாண்ட் வார்னிங், டர்ன் சிக்னல் அலர்ட், போன் பேட்டரி அலர்ட் மற்றும் லோ ஃபியூயல் அலர்ட் போன்ற பல ரைட் அசிஸ்டென்ட் அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த நவீன பைக்கில் உள்ள வாய்ஸ் அசிஸ்டெண்ட், ரைடர்களுக்கு ரேஞ்ச்சை கண்டறிய , பாயின்ட்-பை- பாயின்ட் நேவிகேஷன் மற்றும் 'வாய்ஸ் பேஸ்டு இன்டென்சிட்டி அட்ஜெஸ்ட்மென்ட்' உள்ளிட்டவற்றுக்கு உதவும்.

இந்த பைக்கின் ஹேண்டில்பாரானது மொபைல் நோட்டிபிகேஷன்களை மேனேஜ் செய்வது, கால்ஸை ஏற்று கொள்வது/நிராகரிப்பது, வாய்ஸ் அசிஸ்டென்ட் மற்றும் ரைடிங் மோட் சேஞ்ச் போன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கும். TVS Ronin-ன் ஃப்யூல் டேங்கின் வடிவம் நவீன ரோட்ஸ்டரை விட ரெட்ரோவாக உள்ளது, அதே சமயம் சைட் பேனல்கள் 1980-களின் ரோட்ஸ்டர் டிசைனின் ஹின்ட்டை கொண்டுள்ளன. முற்றிலும் நவீன மோட்டார் சைக்கிளாக வெளிவரும் ரோனின் 17-இன்ச் அலாய் வீல்களில் இயங்குகிறது, மேலும் புதிய ரெமோரா பிளாக் பேட்டர்ன், டூயல் பர்ப்பஸ் டயர்களால் மூடப்பட்டிருக்கும்.

பிரேக்கிங் செயல்பாடுகளுக்காக ஃப்ரன்ட் வீலில் 300 மிமீ டிஸ்க் மற்றும் ரியர் வீலில் 240 மிமீ டிஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது. டாப் வேரியன்ட்டில் ABS - dual channel கொடுக்கப்பட்டுள்ளது. TVS புதிய தலைமுறை வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டே Ronin-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. வார இறுதி நாட்களில் நீண்ட சுற்றுப்பயணங்களுக்கு செல்லும் பழக்கம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, நீண்ட சவாரி வசதிக்காக ஷார்ட் வீல்பேஸை பெறுகிறது இந்த பைக். 160 கிலோ எடையுடன் ரோனின் ஒரு சிறந்த ஆல் ரவுண்டராக இருக்கும் திறனை கொண்டுள்ளது.

மேலும் படிக்க

அரிசி, கோதுமை, தயிருக்கான ஜிஎஸ்டி கட்டணம் ரத்து- நிர்மலா சீதாராமன்

English Summary: TVS: Rs 1.49 Lakh New Superbike Launched, Details Published on: 19 July 2022, 08:01 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.