1. செய்திகள்

Post Office: ரூ.50 முதலீட்டில் ரூ.35 லட்சம் பெற வாய்ப்பு

T. Vigneshwaran
T. Vigneshwaran
Post office

இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் தங்களுடைய பணத்தைச் சேமிப்பதற்கான முக்கியமான வழியாக இந்திய அஞ்சல் துறை செயல்பட்டு வருகிறது.

வளர்ச்சியடையாத பகுதிகளில் வசிக்கும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஆபத்து இல்லாத மற்றும் நல்ல வருமானத்தை வழங்க கூடிய பல சேமிப்பு திட்டங்களை (savings schemes) இந்திய அஞ்சல் துறை செயல்படுத்தி உள்ளது. கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களின் (Rural Postal Life Insurance Schemes Program) கீழ், பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் கிராம் சுரக்ஷா யோஜனா (Gram Suraksha Yojna) மிகவும் பிரபலமானது.

போஸ்ட் ஆஃபிஸ் கிராம் சுரக்ஷா யோஜனா என்பது எண்டோவ்மென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசிக்கு மாற்றுவதற்கான விருப்பத்தின் கூடுதல் அம்சத்துடன் கூடிய முழு ஆயுள் காப்பீட்டு பாலிசியாகும். பாலிசியின் கீழ், பாலிசிதாரர் 55, 58 அல்லது 60 வயது வரை குறைந்த பிரீமியங்களை செலுத்தி அதிகபட்ச பலன்களை பெறலாம். கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களின் முக்கிய நோக்கம் பொதுவாக மக்களிடையே காப்பீட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துவது, கிராமப்புற மக்களுக்கு காப்பீடு வழங்குவது, குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள நலிவடைந்த பிரிவினர்,பெண் தொழிலாளர்கள் பயன் பெறுவது ஆகும்.

India Post வழங்கும் போஸ்ட் ஆஃபிஸ் கிராம் சுரக்ஷா யோஜனா பாலிசியின் முக்கிய அம்சங்கள், நன்மைகள் மற்றும் இந்த பாலிசியை எடுப்பதற்கான தகுதிகள் பற்றி இப்போது பார்க்கலாம்...

  • இந்த பாலிசியை எடுப்பதற்கான குறைந்தபட்ச வயது 19, அதிகபட்ச வயது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது
  • குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ 10,000, அதிகபட்சம் ரூ.10 லட்சம்
  • 4 ஆண்டுகளுக்குப் பிறகு கடன் வசதி உண்டு
  • பாலிசிதாரர் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சரண்டர் செய்யலாம்
  • ஒருவேளை இந்த பாலிசிதாரர்கள் 5 ஆண்டுகளுக்கு முன் பாலிசியை சரண்டர் செய்தால் அவர்களுக்கு போனஸ் பெறும் தகுதி கிடையாது
  • பிரீமியம் செலுத்தும் வயதை 55, 58 அல்லது 60 வயதாக தேர்வு செய்து கொள்ளலாம்

மேலும் படிக்க

TVS: ரூ.1.49 லட்சம் புதிய சூப்பர் பைக் அறிமுகம், விவரம்

English Summary: Post Office: Opportunity to get Rs 35 Lakhs with an investment of Rs 50 Published on: 19 July 2022, 08:21 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.