வரும் ஆண்டில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு, வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.
தமிழகத்தில், தைப் பொங்கல் பண்டிகையினைப் பொது மக்கள் அனைவரும் வெகு விமரிசையாக கொண்டாடும் வகையில், அரசு சார்பாக, நியாய விலைக் கடைகள் மூலம், அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனவும், மேலும், அதனுடன், ரொக்கப் பணமும் வழங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: PM Kisan புதிய அப்டேட் முதல் ரூ. 12,000 சாகுபடி மானியம் வரை!
கடந்த முறை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, ரொக்கப் பணம் வழங்கவில்லை. அதற்குப் பதிலாக அரிசி, சர்க்கரை, பருப்பு, முந்திரி, திராட்சை, நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. ரொக்கப் பணம் வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது எனபது நினைவுக்கூறத்தக்கது.
அந்த வகையில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் பல்வேறு குளறுபடிகள் நிலவியது. இந்த விவகாரத்தினைக் கையில் எடுத்துக் கொண்ட எதிர்க்கட்சிகள், ஆளும் திமுக அரசை கடுமையாக குறை கூறின. இதன் தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு வர உள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இதனுடன், ஒரு சில மளிகைப் பொருட்களும் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களுடன், 1,000 ரூபாய் ரொக்கம் வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாகக் சொல்லப்படுகிறது. இத்தகைய தொடர்பான அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் திட்டத்தை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி வைக்க உள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது. இதனுடன், இலவச வேட்டி - சேலை திட்டமும் தொடங்கி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை, குடும்ப அட்டைதாரர்களுக்கு, 15 நிறங்களில், வேட்டி - சேலை வழங்கப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
PM Kisan புதிய அப்டேட் முதல் ரூ. 12,000 சாகுபடி மானியம் வரை!
TNEB: மின்சார அலுவலகங்களில் ஆதாரை இணைக்க சிறப்பு கவுண்டர்கள்!