தமிழகத்தில், அஞ்சலக செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சுமார் 26.11 லட்சம் கணக்குகள் நடப்பில் உள்ளது. இதனால் இந்திய அளவில் 2ம் இடத்தில் தமிழகம் உள்ளதாக முதன்மை அஞ்சல் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
அஞ்சல் துறை தலைவர் அறிக்கை:
மத்திய அரசின் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் தமிழக மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெற்றோர்களுக்கு வரமாக உள்ளது. ஏனென்றால் இந்த திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 2015ம் ஆண்டு திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகம் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இந்திய அளவில் 2ம் இடத்தில் உள்ளது என்று முதன்மை அஞ்சல் துறை தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் இந்தியாவில் உள்ள சுமார் 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள், 100% மொத்த வங்கி சேவையின் கீழ் இணைக்கப்படும்.
தமிழகத்தில் இயங்கக்கூடிய 11,858 அஞ்சல் நிலையங்கள் மொத்த வங்கி சேவையில் இணைக்கப்பட்டு 100 % பூர்த்தி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்திடம் இருந்து உத்தரவு கிடைத்தவுடன் அஞ்சலக மற்றும் வங்கி கணக்குகளின் இயங்குதள வசதி நடைமுறைப்படுத்தப்பட்டால், அஞ்சலக சேமிப்பு கணக்கிலிருந்து எந்த ஒரு வங்கி கணக்கிற்கும் பணப்பரிமாற்றம் செய்ய இயலும். மேலும் இந்த வசதி மூலம் கிராம புறத்திலுள்ள விவசாயிகள், மூத்த குடிமக்களும் அதிகம் பயன் பெறுவார்கள்.

மேலும் படிக்க