தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டப்படிப்புகளில், இந்த கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், 14 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகளில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையில் பத்து (10) இளங்கலை பட்டப்படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
இந்த படிப்புகளுக்கு 2020-2021 ஆம் வருடத்திற்கான மாணவர் சேர்க்கை தொடர்பான சான்றிதழ் சரிபார்ப்பு இணையதளம் வாயிலாக நடைபெற்று வருகிறது. 50,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
எனவே இன்று (15.10.2020) வெளியிடப்படுவதாக இருந்த வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பட்டப்படிப்பு மாணவர்சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொது தரவரிசைப் பட்டியல் 23.10.2020 அன்றும், சிறப்பு தரவரிசை பட்டியல் 28.10.2020 அன்றும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர் சேர்க்கைப்பிரிவு தலைவர் மற்றும் முதன்மையருமான முனைவர் மா. கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார். செப்.29ம் தேதி வெளியிடப்படவிருந்த தரவரிசைப்பட்டியல், கொரோனா நெருக்கடி காரணமாக அக்டோபர் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...