PM-kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.10,000 நிதி வழங்கப்படும் என பிஜேபி தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா அறிவித்துள்ளார்.
மேற்கு வங்க சட்டமன்றத்தின் பதவிகாலம் நிறைவடைவதால், விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலை முன்னிட்டு, பிஜேபி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இதையொட்டி நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிஜேபியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசினார்.
விவசாயிகளுக்கு ரூ.10,000 (Rs.10,000 for farmers)
அப்போது பிஜேபி ஆட்சிக்கு வந்தால், PM-Kisan திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதி ரூ.10,000மாக உயர்த்தப்படும் என அறிவித்தார். இம்முறை பிஜேபிக்கு ஓட்டு போட்டால், இம்மாநிலத்தைச் சேர்ந்த 75 லட்சம் விவசாயிகளுக்கு, கடந்த முறை மம்தா அரசு அளிக்காமல் விட்டால், ரூ.18,000மும் வழங்கப்படும்.
புதியத் திட்டம் (New project)
கிருஷக் சுரக்ஷா யோஜனா (Krishak Suraksha Yojana)திட்டத்தின் கீழ் நிலமில்லா விவசாயிகளுக்கு ரூ.4,000 வழங்கப்படும்.
33% இடஒதுக்கீடு (33% reservation)
இதுமட்டுமல்லாமல், மீனவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும்.
அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். ஊழலை ஒழிக்கத் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
மேலும் படிக்க...
ஆடு வளர்க்கும் திட்டத்தில் முதலீடு செய்து மாதாந்திர வருவாய் பெற வாய்ப்பு!
விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்! நிரந்தர தீர்வு கேட்டு விவசாயிகள் கோரிக்கை
இயற்கையான கல் உப்பை பயன்படுத்துவோம்! உடல்நலம் காப்போம்!