பழையனவற்றுக்கு எப்போதாவது சந்தையில் மவுசு அதிகரிப்பது வாடிக்கை. அவ்வாறு அதிகரிக்கும்போது, நாம் எதிர்பார்க்காத சில சம்பவங்களும் நிகழக்கூடும்.
ரூ.10 கோடிக்கு (For Rs.10 crore)
அந்த வகையில்,1885ம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட 1 ரூபாய் நாணயம் ஆன்லைனில் ரூ.10 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் பழமைவாய்ந்த நாணயங்களுக்கும், ரூபாய் நோட்டுக்களுக்கும் அண்மைகாலமாக ஆன்லையில் மவுசு கூடிவருகிறது.
அரியதாகக் கருதப்படும் இவற்றைத் தங்களது சொந்தமாக்கிக்கொள்ள லட்சம் ரூபாய் முதல் கோடி ரூபாய்வரைக் கொடுக்க சிலர் தயாராக உள்ளனர்.எனவே நீங்கள் பழைய நாணயங்கள் மற்றும் பழைய ரூபாய் நோட்டுகளை சேகரிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தால், உங்களுக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.
விலை கொடுக்கத் தயார் (Ready to pay the price)
அவ்வாறு பழையனவற்றைச் சேகரிக்கும் சிலர், தங்களிடம் இல்லாத அரிய வகை நாணயங்களை ஆன்லைனில் யாராவது விற்றால் அதை விட அதிக மதிப்பை கொடுத்து வாங்கத் தயாராக இருக்கின்றனர்.
இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு 20 பைசா, 50 பைசா, 25 பைசா, 1994ம் ஆண்டு வெளியான ரூ2 நாணயம், பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.500, ரூ.1000 நாணயம் ஆகியன அதிகவிலைக்கு ஆன்லைனில் வாங்கப்பட்டன. இதற்கான செய்திகளும் அவ்வப்போது வெளியாகின.
தற்போது, அரிய வகை 1 ரூபாய் நாணயம் ரூ.10 கோடிக்கு ஆன்லைனில் விற்பனையாகியுள்ளது. நம்ப முடியவில்லையா?
முதல்முறை அல்ல (Not the first time)
உண்மையாக அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்த ஒரு ரூபாய் நாணயத்திற்கு அப்படி என்ன சிறப்பு என்றால் இந்த நாணயம் 1885ம் ஆண்டு பிரிட்டிஷ் காலத்தில் அச்சிடப்பட்டது.
இப்படியாக அதிகவிலைக்கு நாணயங்கள் விற்பனையாவது இது முதல் முறையல்ல. இதே போல உங்களிடமும் அரிய வகை நாணயங்கள் இருந்தால் நீங்களும் ஆன்லைனில் விற்பனை செய்யலாம்.
மேலும் படிக்க...
உடனடி LPG இணைப்புக்கு புதிய வசதி!
நெல்லை, தூத்துக்குடி, உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலேர்ட்!