1. செய்திகள்

இந்த ஒரு ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா?.. அப்போ அடுத்த அம்பானி நீங்கதான்..!

Sarita Shekar
Sarita Shekar

நீங்களும் அதிகமாக பணம் சம்பாதிக்கும் திட்டத்தை தேடுகிறீர்களானால், வீட்டில் உட்காந்தபடியே கோடீஸ்வரர் (Millionaire) ஆவதற்கான பொன்னான வாய்ப்பு இங்கே. இதில், மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் அதற்கு எதுவும் செய்யத் தேவையில்லை. இந்த குறிப்பிட்ட ஆண்டின் நாணயம் (One Rupee Coin) உங்களிடம் இருந்தால், நீங்கள் எளிதாக 45,000 ரூபாயை வெல்ல முடியும். "Old is Gold" என்ற ஆங்கில பழமொழி நாம் அனைவருக்கும் தெரியும். அதற்க்கு அர்த்தம் பழைய பொருட்கள் என்றுமே தங்கத்தை போன்று மதிப்புடையது. இந்த பழமொழியை மெய்ப்பிக்கும் விதமாக பழைய ஒரு ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் அதனை வைத்து 45,000 மடங்கு அதிகம் சம்பாதிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கேட்கவே சந்தோஷமாக இருக்கிறதா?

பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுக்களை சேமிப்பது சிலருக்கு பொழுதுபோக்கான விஷயம். அருங்காட்சியங்களிலும் கூட பழைய ரூபாய் நோட்டுக்கள், நாணயங்களை நம்மால் பார்க்க முடியும். ஒரு காலத்தில் புழக்கத்தில் பயன்படுத்திய ஒரு பைசா, ஐந்து பைசா, பத்து பைசா, இருபது பைசா, ஏன் 50 பைசா நாணயங்களை 90'ஸ் கிட்ஸ் சிலர் பொக்கிஷமாக சேகரித்து வைத்திருப்பார்கள். அவற்றை இன்று நம்மால் காணமுடியாவிட்டாலும் கூட அவ்வகையான பழைய நாணயங்களை பார்க்கும் போது நமக்குள் ஒருவித சந்தோஷம் ஏற்படும். குழந்தை பருவதுக்கே நமது மனசு சென்று திரும்பும்.

இருப்பினும் பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் சேகரிப்பு என்பது உங்களை கோடீஸ்வரனாக கூட ஆக்கலாம் என்பது மறுக்க முடியாத உண்மை. சிலர் பழைய ரூபாய் நோட்டுக்கள், நாணயங்களுக்காக என்ன விலை கொடுக்கவேண்டும் என்றாலும் தயாராக இருப்பார்கள். அந்த வகையில் பழைய ஒரு ரூபாய் உங்களிடம் இருந்தால் அதனை 45,000 ரூபாய் விலை கொடுத்து வாங்க தயாராக இருக்கிறார்கள். 

அதற்காக நீங்கள் அலைய வேண்டியதில்லை. இணையதளத்தை பயன்படுத்தி வலைத்தளங்களின் மூலமாகவே பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி பணம் சம்பாதிக்க முடியும். ஆனால் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த ஒரு ரூபாய் நோட்டு 1957 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டதாகவும், அதில் அப்போதைய நிதியமைச்சர் ஹிருபாய் எம்.பட்டேலின் கையெழுத்தும் இருக்க வேண்டியது அவசியம். மிகவும் அரிதான இந்த ரூபாய் நோட்டினை CoinBazaar.com என்ற இணையதளத்தின் மூலம் 44,999 ரூபாய்க்கு உங்களால் விற்பனை செய்ய முடியும். இது குறித்து விரிவான தகவல்களை மேற்கண்ட இணையதள முகவரிக்கு சென்று நேரில் காணலாம். 

இங்கு பழைய ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள் விற்பனை மட்டுமல்லாமல் உங்களால் அரிதான கரன்சிக்களை வாங்கவும் முடியும். உதாரணமாக பழைய 50 ரூபாய் நோட்டை 8,200 ரூபாய்க்கும், 10 - 5 ரூபாய் நோட்டை 2999 ரூபாய்க்கும், 2 ரூபாய் நோட்டை 4999 ரூபாய்க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உங்களது ரூபாய் நோட்டை வாங்க விரும்புவோரிடம் ஏல அடிப்படையில் பணத்தை உயர்த்தி வாங்கவும் முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

மேலும் படிக்க..

லட்சத்தில் சம்பாதிக்க.... குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் கோழி வளர்ப்பு!!

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் வேண்டுமா? இதோ உங்களுக்கான சிறந்த ஐடியாக்கள்!!

லாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள் மற்றும் ஊடுபயிர் சாகுபடி பற்றி அறிந்து கொள்ளுங்கள்

English Summary: 1 ka 50 Hazar! THIS 1 Rupee note bundle is selling for Rs 50,000

Like this article?

Hey! I am Sarita Shekar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.