கொரோனா பரவல் மற்றும் விவசாயிகள் போராட்டத்திற்கு மத்தியில் சரியான நேரத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள்பெற்ற பயிர்க் கடன் நிலுவை ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்ததற்காக முதல்வர் பழனிசாமியை விவசாயிகள் சங்கத் தலைவர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தமிழ்நாட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 5.2.2021 அன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைக்கூட்டத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், “கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 இலட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்” என்று அறிவித்தார்கள். விவசாய பெருமக்களின் துயர் துடைப்பதற்காக இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பினை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பல்வேறு விவசாய சங்கங்கள் தங்களது நன்றியினை தெரிவித்து வருகின்றன.
முதலமைச்சருடன் சந்திப்பு
அதன் தொடர்ச்சியாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இன்று (6.2.2021) முகாம் அலுவலகத்தில், தமிழ்நாடு காவிரி பாசன விவசாயிகள் நலசங்கத்தின் பொதுச்செயலாளர் காவிரி ளு.ரெங்கநாதன், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஞ.சு.பாண்டியன் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து, மலர்கொத்து வழங்கி நிவர், புரெவி போன்ற புயல்கள் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கொரோனாவால் ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடியிலும் விவசாயிகளுக்கு இடுபொருள் உதவித்தொகை வழங்கியதோடு, கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்கடன்களையும் தள்ளுபடி செய்து வரலாற்று சாதனையை படைத்துள்ள முதலமைச்சர் அவர்களுக்கு விவசாயிகள் சார்பிலும், விவசாய சங்கங்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தார்கள்.
இந்த அரசு மேட்டுமே விவசாயிகளுக்கான அரசு
முதல்வர் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காவிரி பாசன விவசாயிகள் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் காவிரி எஸ்.ரங்கநாதன், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய முழு கடனும் முதல்வரின் முயற்சியால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பம் இதற்கு முன்பு நடந்தது இல்லை. காப்பீடு நிவாரணம் என்று கொடுப்பார்களே தவிர, பயிர்க் கடனையே தள்ளுபடி செய்யும் அளவுக்கு கொடுத்தது இதுதான் முதல்முறை. நாட்டிலேயே இந்த முதல்வர்தான் விவசாயிகளுக்காக இந்த அளவுக்கு செய்துள்ளார் என்றார்.
சட்டத்திற்குட்பட்ட இந்த தள்ளுபடி பாராட்டுக்குறியது
அவரைத் தொடர்ந்து பேசிய தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், மாநில அரசுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியிலும் எங்கள் கோரிக்கையை ஏற்று, தொடர்ந்து நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிதி நெருக்கடியையும் பொருட்படுத்தாமல், விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று, ரூ.12,110 கோடியை தள்ளுபடி செய்து முதல்வர் அறிவித்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. சட்டத்துக்கு உட்பட்டு இந்த தள்ளுபடியை முதல்வர் அறிவித்துள்ளார் என்றார்.
மேலும் படிக்க
காய்கறி தோட்டங்கள் அமைப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு!
நகைகளை வைத்து விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனும் தள்ளுபடி! அமைச்சர் செல்லூர் ராஜூ
விவசாயிகளுக்கு இனிப்பான செய்தி! இன்று முதல் பயன்பாட்டிற்கு வரும் நெல் கொள்முதல் நிலையங்கள்!