தமிழகத்தில் நடப்பு ஆண்டு ரூ.14,000 கோடி பயிர்க் கடன் வழங்க கூட்டுறவுத் துறை இலக்கு நிர்ணயித்து இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. தமிழகத்தில் நடப்பு ஆண்டான தற்காலத்தில் ரூ.14,000 கோடி பயிர்க் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை தெரிவித்து இருக்கிறது.
மேலும் படிக்க: குறுவை சாகுபடி|மேட்டூர் அணை திறப்பு|காவிரி தண்ணீர்|மயிலாடுதுறை வந்தடைந்தது!
இது தொடர்பாகக் கூட்டுறவு துறை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது, "குறுகிய மற்றும் மத்திய கால கடனமைப்பில், மாநில அளவில் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியும், மாவட்ட அளவில் 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளும், கிராம அளவில் 4,453 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களும் செயல்பட்டு வந்துகொண்டிருக்கின்றன. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு எனப் பயிர்க் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2006-07ம் ஆண்டு முதல் பயிர்க்கடனுக்கான வட்டி விகிதமானது 9 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைக்கப்பட்டு, தற்போது வரை 7 சதவீத வட்டியில் பயிர்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று, இந்த 2% வட்டி இழப்பினைத் தமிழக அரசு வட்டி மானியமாகக் கூட்டுறவுகளுக்கு அளித்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, பிளஸ் 2 துணைத் தேர்வு என்ன ஆச்சு?
2009ம் ஆண்டு முதல் உரிய காலத்திற்குள் கடனை திருப்பிச் செலுத்துகின்ற விவசாயிகளுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய வட்டிச் சுமையினை அரசு தானே ஏற்றுக்கொள்ளும் என ஆணையிடப்படட்டது. அதனடிப்படையில் இன்றளவும் விவசாயிகளுக்குத் தொடர்ந்து வட்டியில்லாத பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது நோக்கத்தக்கது. அதிலும் உரிய தவணை தேதிக்குள் பயிர்க் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகள் சார்பாக 7 சதவீத வட்டியினை அரசே கூட்டுறவுச் சங்கங்களுக்கு செலுத்தி வருகிறது என்பது கூடுதல் தகவல்.
மேலும் படிக்க: TNEA: 2.28 லட்சம் பேர் விண்ணப்பிப்பு! ஜூன் 26-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல்!!
சுமார் 94,749 விவசாயிகளுக்கு கடந்த ஆண்டில் ரூ717.29 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டிருந்தது. நிகழும் ஆண்டில், 15.06.2023 வரை 14,641 புதிய உறுப்பினர்களான விவசாயிகள் சேர்க்கப்பட்டு, அவர்களில் 1,00,986 உறுப்பினர்களுக்கு ரூ.84.09 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டு இருக்கிறது.
மேலும் படிக்க: மண்ணில் நைட்ரஜனை இயற்கையாக சேர்ப்பது எப்படி? விவரம் உள்ளே!
ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டு, சாகுபடி பணி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் வழங்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்த செய்தி ஆகும். பயிர்க் கடன் தேவைப்படும் அனைத்து விவசாயிகளுக்கும் தகுதிக்குட்பட்டு தங்கு தடையின்றி கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பயிர்க் கடன் வழங்கப்பட்டு வருகின்றது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
துவரம் மற்றும் உளுத்தம் பருப்பு- அக்.31 வரை ஒன்றிய அரசு கடும் உத்தரவு
"பிங்க் வாட்ஸ்அப்" மோசடி லிங்கை தொட்டா மொத்த பணமும் காலி! உஷார்!