
Kuruvai Cultivation|Mettur Dam Opening|Caveri Water|Mayiladuthurai Arrived
78,000 ஹெக்டேர் குறுவை சாகுபடிக்கு பாசனம் அளிக்கும் வகையில் காவிரி நீர் மயிலாடுதுறையை வந்தடைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை திருவாலங்காடு அருகே நுழையும் இடத்தில் ஆற்று நீர் மாவட்டத்திற்குள் செனறுள்ளது.
மேலும் படிக்க: 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, பிளஸ் 2 துணைத் தேர்வு என்ன ஆச்சு?
டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்ட காவிரி நதி நீர் செவ்வாய்க்கிழமை அதிகாலை மாவட்டத்துக்கு வந்தது. இந்த நதி நீர் மாவட்டத்தில் 78,000 ஹெக்டேருக்கு மேல் பருவகால நெல் சாகுபடிக்கு பாசனம் அளிக்கும் என்று PWD-WRD வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: கற்றாழை பற்றி தெரிஞ்சிதுனா நீங்க விடவே மாட்டீங்க!
செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் திருவாலங்காடு அருகே நுழையும் இடத்தில் ஆற்று நீர் மாவட்டத்திற்குள் சென்றது. பின்னர் காலையில் கலெக்டர் ஏ.பி.மகாபாரதி மற்றும் அதிகாரிகள் குத்தாலம் அருகே ஆற்றுக்கு வரவேற்பு அளித்தனர்.
மேலும் படிக்க: மண்ணில் நைட்ரஜனை இயற்கையாக சேர்ப்பது எப்படி? விவரம் உள்ளே!
சிறப்புநிலையில் கால்வாய்களின் தூர்வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலையூரில் உள்ள டெயில்-எண்ட் ரெகுலேட்டருக்கு ஒரு நாளில் தண்ணீர் வந்து சேரும் என்று எதிர்பார்க்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து வயல்களுக்கு பாசனத்திற்காக வாய்க்கால்களில் விடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்வரத்து செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 106 கனஅடியாகவும், வெளியேற்றம் சுமார் 10,000 கன அடியாகவும் உள்ளது என WRD தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: TNEA: 2.28 லட்சம் பேர் விண்ணப்பிப்பு! ஜூன் 26-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல்!!
அதன் முழு நீர்த்தேக்க மட்டமான (FRL) 120 அடிக்கு எதிராக சேமிப்பு நிலை 98 அடியாக உள்ளது. மேலும் ஆற்றின் போக்கில், கிராண்ட் எனும் கல்லணை அணைக்கட்டில் வெளியேற்றம் 3,152 கனஅடியாக உள்ளது. வெண்ணாறு ஆற்றில் மொத்தம் 3,153 கனஅடி தண்ணீரும், பெரிய அணைக்கட்டு கால்வாயில் 1,102 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மூவலூர் ரெகுலேட்டரை வந்தடைந்த காவிரி நீர், காவிரி துலாக் கட்டம் வழியாகச் சென்று ஆற்றின் இறுதிப் புள்ளியான பூம்புகார் அருகே மேலையூரில் உள்ள வால் முனை ரெகுலேட்டரை வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க
துவரம் மற்றும் உளுத்தம் பருப்பு- அக்.31 வரை ஒன்றிய அரசு கடும் உத்தரவு
"பிங்க் வாட்ஸ்அப்" மோசடி லிங்கை தொட்டா மொத்த பணமும் காலி! உஷார்!
Share your comments