News

Thursday, 05 November 2020 11:40 AM , by: Elavarse Sivakumar

Credit : Allindia Roundup

காலம் எவ்வளவுதான் மாறினாலும், சுயதொழில் செய்து வருமானம் ஈட்டுவது என்பது நம்முடைய சுய கவுரம். அந்தவகையில், மிகக்குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய ஒரு சுயதொழில் என்றால், அது சாக்லேட் தயாரிப்புதான்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாக்லேட்டை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். சாக்லேட்டுக்கு சந்தையிலும் அதிக வரவேற்பு இருக்கிறது. எனவே வீட்டிலேயே 100 ரூபாய் முதலீட்டில் செய்யக்கூடிய சாக்லேட் தயாரிப்பு தொழில் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

இந்த சிறு தொழில் பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் வீட்டில் இருந்தபடி செய்யலாம். நல்ல லாபம் தரும் தொழில்.

இடவசதி (Place)

இந்த சாக்லேட் தயாரிப்பு தொழிலை வீட்டில் இருந்தபடியே ஒய்வு நேரங்களில் செய்யலாம் என்பதால் வீட்டில் உள்ள சிறிய அறையே போதுமானது.

Credit : Wallpaperflare

முதலீடு (Investment)

  • ஒரு கிலோ சாக்லேட் தயார் செய்ய முதலீடாக தாங்கள் வெறும் 100 ரூபாய் மட்டும் செலவு செய்தாலே போதும்.

  • chocolate mold tray அவசியம். இத்துடன் அச்சுகள் அனைத்தும் பல டிசைன்களில் மிக குறைந்த விலையில் கிடைக்கின்றன.

  • அவற்றை வாங்கி வைத்துக்கொண்டால் போதும். ஒரு முறை முதலீடு செய்வது பல முறை வருமானம் பார்க்க உதவும்.

மூலப்பொருட்கள் (Raw Materials)

மூலப்பொருட்கள் என்று பார்த்தால் சர்க்கரை, food colour, corn syrup அல்லது cough syrup, பேக்கிங் கவர் இவையனைத்தும் தேவைப்படும்.

தயாரிப்பு முறை (Preparation Method)

  • ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து அதில் இரண்டு கப் சர்க்கரை, 3/4 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளற வேண்டும்.

  • இரண்டு கப் சர்க்கரைக்கு மூன்று ஸ்பூன் என்ற அளவில் corn syrup சேர்த்துக் கொள்ளவும்.

  • சர்க்கரை பாகானது தேன் பதத்திற்கு வந்த பிறகு ஏதாவது ஒரு food colour ஒன்றை அவற்றில் சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

  • பின் அடுப்பில் இருந்து இறக்கி chocolate mould tray அச்சுகளில் ஊற்ற வேண்டும் பின் சிறிது நேரம் ஆறவிடவும். இதில் காஃபின் மற்றும் மில்க் ஷேட்களை வைத்து மெருகூட்டவும்.

  • பின் அச்சுகளில் இருந்து சாக்லேட்டுகளை தனியாக எடுத்து பேக்கிங் செய்யுங்கள். பிறகு விற்பனைக்கு அனுப்பலாம்.

சந்தை வாய்ப்பு (Marketing)

இந்த சாக்லேட்டுகளை உங்கள் ஊரில் உள்ள சிறிய பெட்டி கடைகள், மல்லிகை கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம். சந்தையில் அதிக வரவேற்பு உள்ள தொழில் என்பதால் தாங்கள் தயார் செய்யும் சாக்லேட்டுகள் மிக எளிதாக விற்பனையாகிவிடும்.

வருமானம் (Income)

இந்த தொழிலைப் பொறுத்தவரை 1 கிலோ சாக்லேட்டுக்கு ரூபாய் 200 முதல் 250 வரை வருமானம் கிடைக்கும். பெண்களுக்கு வீட்டில் இருந்து செய்யக்கூடிய சிறந்த சுயதொழில்.

மேலும் படிக்க...

ரூ.25 ஆயிரம் முதலீட்டில் லட்சம் சம்பாதிக்க உதவும் பாக்கு மட்டைத் தட்டு தயாரிப்பு!

இருமடங்கு சாகுபடி தரும் திருந்திய நெல் சாகுபடி!

தமிழகத்தில் விவசாயத்திற்கான இலவச மின்வினியோக நேரம் மாற்றம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)