பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 11 February, 2024 9:22 AM IST
Students of Amrita Agricultural College

அரசம்பாளையத்தில் உள்ள அமிர்தா வேளாண் கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவ, மாணவியர் ஊரக வேளாண் செயல்முறை பயிற்சி அனுபவத் திட்டம்- கிராமப்புற தங்குதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான நவீன யுக்தி செயல்முறை விளக்க முகாமை நடத்தினர்.

கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த தேவரடிபாளையத்தில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. எஸ். எம். எஃப். ஜி கிராம் சக்தி அமைப்பின் ஆதரவுடன் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. வடசித்தூர் கால்நடை மருத்துவமனை மருத்துவர், டாக்டர்.பிரகாஷன் தலைமை தாங்கினார்.

கால்நடைகளுக்கு தடுப்பூசி ஏன் அவசியம்?

தடுப்பூசி எனப்படுவது, நோய் ஏற்படுத்தும் கிருமிகளான பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைகள் போன்றவற்றை உயிரோடோ அல்லது இறந்த நிலையிலோ வைத்திருக்கும் . இதனை உபயோகப்படுத்தி கால்நடைகளில் நோய்களுக்கெதிரான எதிர்ப்புசக்தி தூண்டப்படுகிறது.

தடுப்பூசிகளில் நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளிடமிருந்து பெறப்பட்ட நச்சுகள், செயலிழந்த நச்சுகள், போன்றவையும் இருக்கும். சரியான வயதில் பண்ணையிலுள்ள இளம் கன்றுகளுக்குத் தேவையான தடுப்பூசிகளை கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் படி தடுப்பூசிகளை மாடுகளுக்கு அளிக்க வேண்டும் எனவும் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு மேற்கொண்டனர்.

அதுமட்டுமின்றி சுத்தமான பாலை உற்பத்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளும், கால்நடைக் கொட்டகைகளை கிருமி நீக்கம் செய்வது பற்றியும், பொதுவாக உபயோகிக்கப்படும்  கிருமி நாசினிகளான  பிளீச்சிங் பவுடர், போரிக் அமிலம் , காஸ்டிக் சோடா , கிரெசால் , சுண்ணாம்பு, ஃபீனால், குவார்ட்டனரி அமோனியம் பொருட்கள் , சோப்பு , சோடியம் ஹைப்போகுளோரைட், வாஷிங் சோடா ஆகியவற்றின் பயன்களும், உபயோகிக்கும் முறைகளை பற்றியும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

கடுமையான சுகாதார நடைமுறைகள், பால் கறக்கும் கருவிகளை முழுமையாக சுத்தம் செய்தல், பால் கறக்கும் சூழலைச் சுத்தப்படுத்துதல் மற்றும் பால் கையாளுபவர்களுக்கான தனிப்பட்ட சுகாதாரத் தரங்களைப் பின்பற்றுதல் ஆகியவை சுத்தமான பால் உற்பத்தியில் உள்ளடங்கும். கால்நடைகளின் ஆரோக்கியம் முக்கியமானது, சரியான ஊட்டச்சத்து, வழக்கமான கால்நடை பராமரிப்பு மற்றும் சுகாதாரமான வாழ்க்கை சூழல் தேவை. தரக்கட்டுப்பாடு நடவடிக்கைகள், அசுத்தங்கள் பற்றிய வழக்கமான சோதனை மற்றும் ஒழுங்குமுறை தரங்களுடன் இணங்குதல் உட்பட, பால் விநியோகத்தின் பாதுகாப்பு மற்றும் தூய்மையை மேலும் உறுதி செய்கிறது.

நோய் அறிகுறி குறித்து விழிப்புணர்வு:

அடைப்பான் நோய், கோமாரி நோய், மடி நோய், கட்டி தோல் நோய் மற்றும் புரூசெல்லா ஆகிய நோய்களின் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகளை குறித்து மாணவர்கள் விளக்கம் அளித்தனர். அதை தொடர்ந்து, நோய்வாய்ப்பட்ட கோழிகளின் அறிகுறிகளை பற்றியும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

கல்லூரி முதல்வர் முனைவர். சுதீஷ் மணலில் அவர்களின் தலைமையிலும், பேராசிரியர்கள் முனைவர் சத்ய பிரியா, முனைவர். பிரியா, முனைவர். பார்த்தசாரதி, முனைவர். மகேசன், ஆகியோரின் ஆதரவுடன் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் நவ்யா, கீர்த்தனா, சாய் ஷ்ரேயா,  சாய் ஷோபனா, காவியா, பிருத்விராஜ், சிவானி, நிதின், தேவிகா, ஐஸ்வர்யா, ஆதித்யன் குருப், ஆர்த்ரா, கோபிகா, சோனிஷ், சுதீந்த்ரா கிருஷ்ணா ஆகிய மாணவ, மாணவியர் பங்கு வகித்தனர்.

Read also:

PMFBY பயிர் காப்பீடு- என் பாலிசி என் கையில் நோக்கம் என்ன?

Bharat Ratna விருது- ஒரே ஆண்டில் எம்.எஸ்.சுவாமிநாதன் உட்பட 5 பேர்!

English Summary: Students of Amrita Agricultural College imparted awareness about animal husbandry
Published on: 11 February 2024, 09:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now