PMFBY பயிர் காப்பீடு- என் பாலிசி என் கையில் நோக்கம் என்ன?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
purpose of my policy in my hand

மோசமான சூழ்நிலைகளால் மகசூல் பாதிப்பு ஏற்படும் காலங்களில் அதனை ஈடு செய்யும் வகையில் இழப்பீடுத் தொகையினை விவசாயிகள் பெறும் வகையில் PMFBY திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், ”என் பாலிசி என் கையில்” என்கிற சிறப்பு முகாம் குறித்தும், பயிர் காப்பீடு தொடர்பு குறித்தும் வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திரசேகரன் சில தகவல்களை நம்முடன் பகிர்ந்துள்ளார்.

எதிர்பாராத வானிலை மாற்றங்களால் எற்படும் இயற்கை இடர்பாடுகளிலிருந்தும், பூச்சித்தாக்குதல்களினாலும் மகசூல் இழப்பு ஏற்படும் கடினமான சூழ்நிலைகளில், உழைக்கும் விவசாயிகளின் வாழ்வாதாராத்தை, காக்கும் பொருட்டு பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம்( PMFBY) கடந்த 2016 ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.

விவசாயிகளுக்கு பலனளித்த பயிர் காப்பீடு திட்டங்கள் எவை?

PMFBY திட்டத்திற்கு முன்னதாக பயிர் காப்பீடு தொடர்பான திட்டங்கள் எதுவும் இல்லையா? என்கிற கேள்வி உங்களில் சிலருக்கு எழலாம். முன்னதாக, தேசிய வேளாண் காப்பீட்டு திட்டம் (NAIS) வானிலை அடிப்படையிலான பயிர்காப்பீடு திட்டம் மற்றும் திருத்தப்பட்ட  தேசிய வேளாண்மை காப்பீட்டுத்திட்டங்கள் ( NNAIS ) போன்ற பயிர் காப்பீட்டு திட்டங்கள் நடைமுறையில் இருந்தது. அத்திட்டங்களை திரும்ப பெற்றதை தொடர்ந்து , தற்போது ( PMFBY) செயல்பாட்டில் உள்ளது.

காப்பீடு செய்யப்படும் பயிர்கள் எவையெல்லாம்?

உணவுப்பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள்,பயறுவகை பயிர்கள் ( நெல், மக்காசோளம்,கம்பு,உளுந்து,பாசிபயறு,நிலக்கடலை மற்றும் எள் போன்ற பயிர்கள்) மற்றும் வருடாந்திர பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள், பணப்பயிர்கள்( பருத்தி ,மஞ்சள், வாழை, மரவள்ளி, வெங்காயம்)

விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

உணவுத்தானிய பயிர் மற்றும் எண்ணெய வித்துப்பயிருக்கு காப்பீட்டுத் தொகையில் 2% மட்டுமே பிரீமியம் தொகையாக விவசாயிகள் செலுத்த வேண்டும்.

அதுபோல பணப்பயிர் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு 5% மட்டுமே பிரீமியம் வசூலிக்கப்படுகிறது. மீதித்தொகையை விவசாயிகளுக்காக மத்திய-மாநில அரசுகள் செலுத்துகின்றன. சில பயிர்களுக்கு (FIRKA) பிர்கா அளவிலும், சில பயிர்களுக்கு வருவாய் கிராம ( REVENVE VILLAGE) பயிர் காப்பீடு செய்யப்படுகிறது.

கடந்த 8 ஆண்டுகளில் PMFBY திட்டத்தின் சாதனைகள்:

  • 16.06 கோடி விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டின் பலன் கிடைத்துள்ளன.
  • 1.52 இலட்சம் கோடி இழப்பீடாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
  • AIDE ஆப் மூலமாக விவசாயிகள் வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கும் வசதி.
  • நாடு முழுவதும் பயிர் காப்பீட்டிற்கு உதவிஎண் (HELP LINE) 14447 தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

” என் பாலிசி, என் கையில்” என்ற சிறப்புமுகாம் நாடெங்கும் ஜனவரி 15 முதல் பிப்ரவரி 15 வரை நடைபெறுகிறது. உங்கள் ஊரில் நடக்கும் முகாம்களில் கலந்து கொண்டு காப்பீட்டு பாலிசி போன்ற பல்வேறு வகையான விபரங்களை தெரிந்து கொள்ளலாம் இந்த திட்டத்தை தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் செயல்படுத்தி வருகின்றன என்பது கூடுதலான தகவலாகும்.

மேற்குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள்/ முரண்கள் இருப்பின் வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் அவர்களை தொடர்புக் கொள்ளலாம். தொடர்பு எண்: 9443570289

Read also:

துவண்டு போகாத மனம்- தேனீ வளர்ப்பில் லட்சங்களில் வருமானம் ஈட்டும் கொளப்பலூர் மஞ்சுளா

பத்மஸ்ரீ விருதா? தென்னை விவசாயி நரியாள் அம்மாவின் முதல் ரியாக்‌ஷன்!

English Summary: In PMFBY Crop Insurance purpose of my policy in my hand Published on: 09 February 2024, 11:27 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.